கண்ணீர் அஞ்சலி

தோற்றம் : 08-03-1969 மறைவு: 16-02-2014

திரு பொன்னம்பலம் சிவசோதி

புங்குடுதீவு-2

ஆருயிர் நண்பனே!

‘சோதி’ என்ற பெயருகேற்றால் போல்
‘சோதி’ வடிவாய் பிரகாசித்தவனே!
சோகங்கள் உனை வந்து சூழ்ந்ததேனோ

ஆழமான நட்பினால் நம்மை ஆட்கொண்டிருந்த ஆருயிர் நண்பனே!
அழகும் அறிவும் உன்னோடு பிறந்தனவே!
அத்தனை செல்வங்கள் இருந்தும்
அதிரடியாய் ஆழா துயரத்தில் நம்மை ஆழ்த்திவிட்டு
நின்னுயிர் நமைவிட்டு பிரிந்ததேனோ?

பொங்கும் கடலோசை எங்கும் சுற்றி கவி பாட,
புங்கை மரங்கள் எங்கும் புடைசூழ நின்று
அசைந்தாடி தாலாட்டு பாடும் புங்கையூர் மண்ணில்….
வந்து அவதரித்த மைந்தனே!

வனப்புடனும் வசதியுடனும் வந்து பிறந்தவனே…!
வறுமையும் பிணியும் தெரியாமல் வளர்ந்தாயே -நீ
வந்து வாழ்ந்த இடத்திலும் வளமுடன்
வனப்பும் வசதியும் குறையாமல் வாழ்ந்தாயே!

உன் வாழ்வில் வந்த சோதனை தான் என்னவோ?
வாழத்தெரியாமல் வாழ்ந்தாயோ – அன்றேல்
வாழ்வு தான் உனக்கு வந்தமையவில்லையோ?

ஏன் நம்மை விட்டு தனியாய் பிரிந்து சென்றாய்?
உன்பிரிவால் எம் உள்ளமும், உதிரமும் உறைந்து போனதடா
உணர்வுகள் உன்நினைவில் நாளும் மூழ்கிப்போகின்றதடா..

கனவுகளிலும் நினைவுகளிலும் – நீ
நித்தமும் வந்து கதை பேசுகின்றாய் -நம்
கண்கள் கலங்கிப் போகின்றதடா..
உயிர் உள்ளவரை உன்னை நாம் மறவோம்

நம்மை மன்னித்துவிடு.. நண்பனே
உன் மரணத்தை நம்மால் வெல்ல முடியவில்லை.

உன் பிரிவினால் துயருறும்
மோகன் குடும்பம்
1032 ROMANEL-SUR-LAUSANNE