31ஆம் நாள் நினைவஞ்சலி…!!
அமரர். ஐயம்பிள்ளை தனலட்சுமி (செல்லம்மா)

மண்ணில் 05.06.1934 விண்ணில் 04.10.2015

நித்திய புன்னகை கொண்ட
எங்கள் சின்ன மாமியே,
நிம்மதியாய்த் தூங்கி விட்டாயா?!

எங்களை எல்லாம் “தம்பி, பிள்ளை” என்று
உரிமையோடு அழைத்தாயே..!
அந்த உன்னதமான இனிய குரலை
நாங்கள் எப்போ கேட்போம் மாமி?!

வந்தாரை வரவேற்று வசந்தங்கள் நிழலாட,
வாழ்வாங்கு (வென்று) வாழ்ந்தாய் மாமி..
இன்று சொந்தங்களின் கண்ணீரால்
நிலையாக நின்றாய் மாமி..!

உறவுகள் உன்னை ஒளிவட்டமாக சூழ்ந்திருக்க,
வானில் தோன்றும் மின்னலாய்,
மறைந்து விட்டாயே மாமி..
ஊருக்காய் உழைத்த உங்கள் கருணை உள்ளம் – இனி
யாருக்கு வருமோ மாமி..!

தெய்வப் பணி செய்து நின்ற எங்கள் தனலட்சுமி நீ,
எங்கள் விழி பார்த்திருந்த கண்கண்ட தெய்வமே,
உதவும் கரங்களோடு உறவுக்கும், நட்புக்கும்
உறுதுணையாய் நின்றாயே மாமி..!

உங்களைப் பிரிந்து தவியாய் தவிக்கின்றோம் மாமி,
ஆனைமுகத்தானும் ஆஞ்சநேயனும் சேர்ந்து உங்கள்
ஆத்மா சாந்திபெறும் மாமி..
உங்கள் ஆத்மா சாந்தியடைய
ஆதிபராசக்தியை வேண்டுகிறோம் ஓம் சக்தி..!!

***எங்கள் சின்ன மாமியின் 31ஆம் நாள் நினைவுக்கு இங்கு வந்திருந்த அனைத்து உள்ளங்களுக்கும் எங்கள் நன்றிகள்.

இவ்வண்ணம்,
உங்கள் பிரிவால் வாடும்,
பெரியதம்பி (பாலசிங்கம்) பிள்ளைகள்
– சறோஜினி, தயாபரன், செல்வி குடும்பங்கள் (சுவிஸ்)

**** 31ம் நினைவுநாள் நிகழ்வுகள் 07.11.2015 அன்றுகாலை நடைபெறும்.
நடைபெறும் இடம்..
50 Rue De Torcy,
75018 Paris,
France.

Thaya Notice