“விழிநீர் சொரிந்து விடை கொடுத்து ஆண்டு ஒன்று”..

பிரகாசஒளி:-08.09.1924 பிரிவின்வலி:-11.01.2013
நுவரெலியாவில் பிறந்து, சரவணையில் வாழ்ந்து கனடாவில் இறையடி சேர்ந்த
அமரர் கதிர்காமர் செல்லத்துரை(C.T.B)

பிரகாச ஒளியாய் இருந்து எமையெல்லாம்
பிரகாசிக்க வைத்து நற்துணையாயிருந்தீரே
பிரிவென்ற கடல்தனிலே தத்தளிக்க வைத்தீரே
பிறவியிலே உமைபோன்று யாருண்டு எமக்குஐயா

கனிவுமிகு கணவனாக கண்ணாயிருந்தீர் ஐயா
கல்வியோடு யாவும்தந்த தந்தையாயிருந்தீர் ஐயா
கருணைமிகு பாசமான மாமனாய் வாழ்ந்தீர் ஐயா
கண்ணான பேரனாய் பூட்டனாய் வாழ்ந்தீரே ஐயா

ஐயா உமைப்பிரிந்து ஆண்டு ஒன்று
ஐயா என இதழ் அழைத்து ஒராண்டு
ஐயா உம்மிதழால் ஒலித்த பாஒன்று
ஐயா ஒலித்து கொள்கிறதே என்றென்றும்

நம் காதில் ஒலித்துக் கொண்டிருக்கும்
ஐயாவின் நாவில் தவழ்ந்த பாடல் வரிகள்

நான் எனும் ஆணவத்தால்
நாசமானவர் பல கோடாகோடி
எண்ணியபடி எதுவும் நடவாது
எல்லாம் அவன் செயல் மனப்பால் குடியாதே!
கண்ணிணால் காண்பதெல்லாம் பொய்யே
ஞானக்கண்ணை திறந்து பார் மெய்யே!
நாடகமே உலகம் நாளை நடப்பதை யாரறிவார்.
ஒரு நாடகமே உலகம்..!!

**எம்முடன் நினைவில் வாழும் இறையடி சேர்ந்ந ஐயாவின்
ஓராண்டு ஆத்மா சாந்தி கிரிகை 31.12.2013 அன்று கனடாவில்
அன்னாரது இல்லத்திலும், ஆத்மாசாந்திப் பிரார்த்தனை
கொக்குவிலில் அன்னாரது இல்லத்திலும் நடைபெறும்.
உறவுகள் அனைவரையும் கலந்து ஐயாவின் ஆத்மாசாந்தி
அடைய பிரார்திக்குமாறு தயவுடன் அழைக்கின்றோம்..!

தகவல்:- சிவா(மகன்) 004179 6249004, 043 2431501
கனடா.-905 2949064, 905 4718966 இலங்கை:-0213008699