அமரர். சுந்தரம் சதீஸ் (செழியன்)
பிறப்பு – 20.06.1982 இறப்பு – 14.05.2015
பிறந்த இடம் – கொடிகாமம்.
வாழ்ந்த இடம் – திருநாவற்குளம், வவுனியா.

===சுந்தரம் சதீஷ் ===

கொடிகாமத்து தொப்புள் கொடியொன்று,
அன்னை மண் விடிவுக்காய்,
வித்தாகி விதையாகியது….

தாயக மண் மீட்பில், தானைத் தலைவனுக்கு
தோள்கொடுக்க, பொட்டுவின் புலியாகி
தலைநகரில் புகுந்தது புலனாய்வு செய்ய..

தகவலும் இரகசியமும்.. தன் உயிரை விட
உன்னதமானது.. இது உண்மையானது…
உனது இறப்பில், வீரனே..

ஏன், உன் உயிர் போனது?
இன்றுவரை பதிலில்லாத கேள்வி..
உன்மரணமும் இரகசியமாகிப் போன தகவலே…

தாக்குதலுக்காக தலைநகர் செல்க…
தலைமை சொன்னதை தயங்காது செய்தாய்…
சிங்கத்து வாசல சிதறிப்போக..
திட்டங்கள் தீட்டி தலைமைக்கு அனுப்பினாய்…
எலும்புத்துண்டை நக்கும் ஆசையில், நாய் ஒன்று. .
காட்டிக் கொடுத்ததால், கைது ஆனாய்…

கடமை முடியுமுன் கைது ஆனதால்
கவலைப்பட்டாய், கண்ணீர் விட்டாய்..
இரகசியம் காக்க அல்லும்பகலும்
பாடுபட்டாய், படாத பாடுபட்டாய்..
கசக்கி கசக்கி உன் உடல் பிளிந்து..
உதிரம்கொட்ட உண்மை காத்தாய்..
தமிழ் மண்ணைக் காத்தாய்..

ஊமை அடிகள்,உள்ளூரக் காயங்கள்
தேகம்நொந்து, தேய்ந்து போனாய்..
உன்னைக் காண, வருவோர்க்கு முன்னே..
பல்லைக்காட்டி பகட்டாய் நடப்பாய்..
வேதனைமறைத்து, வேடிக்கை காட்டுவாய்..

வருவாய் என்று வாசலில் நின்று காத்து நின்றோம்.. அன்று,
வரலாறாகி, மாவீரராகி மண்ணை மதிக்கிறாய்.. இன்று…
உன்னைக் கொண்டவளும்.. உன்னால் வந்தவனும்,
வாசலைப் பார்த்து.. மூச்சையாகிப் போனதே மிச்சம்..

தற்கொலை செய்ய நீ கோழை இல்லை..
சா.. வரும் வயது இல்லை..
நோய் இது வரை கண்டதில்லை..
ஏன் உன்னுயிர் போனது? இதுவரை தெரியவில்லை..

வீரா.. வீரத்தோடு மோத.. விளையாடப் போனாயோ…
தாய்மண் அடிமையானதை சகிக்காமல் மாண்டாயோ…
தடுப்பிலே உன் தவிப்பு தெரியாமல்.. விடுப்பு பாக்க எத்தனை பேர்..
வெக்கமாய் இருக்கு அதை நினைத்து.. வேதனையாக இருக்கிறது…

தேசத்தின் தென்றலுக்கு நீ சுவாசம்..
உன் மூச்சு அடங்கியதா? இல்லை அடக்கப்பட்டதா?..
எதுவாகினும் சருகாகி, சாம்பரானது ஒரு சகாப்தம்..
வீரனுக்கு மரணமில்லை..
விடுதலைக்கு எல்லை இல்லை..
சுதந்திரத்துக்கு கட்டுப்பாடு இல்லை.. -சுந்தரம் சதீஷ் மறையவில்லை..

காலம் காத்திருந்து, கருவறுக்கும்..
கடமை செய்தவனே, கலங்காதிரு..
உன் உயிர் இங்கேதான் ஊசலாடுகிறது. .
அது நிச்சயம் எதிரியை,கருவறுக்க காத்திருக்கும்..

உனக்கு வீரவணக்கம் வேண்டாம்..
உன் வித்துடலும் எமக்கு வேண்டாம்.
எங்கள் மனசிலே வாழும் மன்னவனே..
எங்களை, இறுக அணைத்துக் கொள்ளுங்கள்..

மீண்டும் ஈழமண்ணில் வந்து போரிடு..
என்னில் வந்து குடியேறு..
விளையாடி வெற்றி பெறு…
மோது, உடைத்தெறி..
வெற்றிவாகை சூடு, இது வீரவிளையாட்டு விடுதலை..
சுந்தரம் சதீஷ்க்கு, வீரவணக்கம்..

-திருமதி. சதீஷ் கவிதா (மனைவி), திரு.சாகித்யன்(மகன்) -சுவிஸ்-

frames-design1aa