“யாழ் நெடுந்தீவு கிழக்கினை பிறப்பிடமாகவும், சுன்னாகத்தை வசிப்பிடமாகவும், வவுனியா திருநாவற்குளத்தை தற்காலிக வசிப்பிடமாகவும் கொண்ட”

அமரர் சோமசுந்தரம் நகுலேஸ்வரம்பிள்ளை

(சமாதான நீதவானும், தொழிற்சட்ட ஆலோசகரும், ஓய்வு பெற்ற உதவித் தொழில் ஆணையாளர் – தொழிற் திணைக்களம், வவுனியா)

பிறப்பு : 04-01-1951
இறப்பு : 17-02-2017

யாழ் நெடுந்தீவு கிழக்கினை பிறப்பிடமாகவும், சுன்னாகத்தை வசிப்பிடமாகவும், வவுனியா திருநாவற்குளத்தை தற்காலிக வசிப்பிடமாகவும் கொண்ட சோமசுந்தரம் நகுலேஸ்வரம்பிள்ளை 17.02.2017 அன்று காலமானார்.

இவர் அமரர் சோமசுந்தரம் ( ஓய்வு பெற்ற அதிபர்), அமரர் சோதிப்பிள்ளை தம்பதிகளின் புதல்வரும், அமரர் கதிரமலை, நவமணி தம்பதிகளின் மருமகனும் சோதிமதி அவர்களின் பாசமிகு கணவரும்,

திருமகள்(வைத்தியர்,வவுனியா பொது வைத்தியசாலை), யசிவன் (மிருக வைத்தியர், பிராந்திய முகாமையாளர் , CIC Feeds, Northern Animal Clinic,கோண்டாவில்), அரவிந்த் (பொறியியலாளர், அவுஸ்ரேலியா) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

திருவருட்செல்வன்(வைத்தியர்,வவுனியா பொது வைத்தியசாலை), விஜயதர்சினி(அரச கால்நடை வைத்தியர், கால்நடை வைத்திய அலுவலகம், நல்லூர்), சோபனா(அவுஸ்ரேலியா) ஆகியோரின் பாசமிகு மாமனாரும் ஆவார்.

அன்னார் மகேஸ்வரி (விசுவமடு), கேதீஸ்வரம்பிள்ளை (வைத்தியர், வெல்லவாய), கமலேஸ்வரி (விசுவமடு), கோணேஸ்வரம்பிள்ளை(கனடா), அமரர் சிவகணேஸ்வரி ஆகியோரின் பாசமிகு சகோதரரும், திருக்கார்த்திகன், ராகவர்சினி,சப்தகன், சேயோன் ஆகியோரின் பேரனுமாவார்.

அன்னாரின் ஈமைக்கிரியைகள் 20.02.2017, திங்கட்கிழமை, பிற்பகல் 1.00 மணியளவில் அன்னாரின் இல்லத்தில் நடைபெற்று பூதவுடல் தகனக் கிரியைகளுக்காக பத்தினியார் மகிழங்க்குளம் இந்து மயானத்திற்கு எடுத்துச் செல்லப்படும் என்பதனை அறியத்தருகின்றோம்.

தகவல் : குடும்பத்தினர்

இல: 51, 1ம் ஒழுங்கை,
திருநாவற்குளம்,
வவுனியா.

0242223638
0718711206