1ம் ஆண்டு நினைவஞ்சலிகள் ..!!
மலர்வு உதிர்வு
20 டிசெம்பர் 1996 6 மே 2013
அமரர் ஜவீன் ஜனனி
மலர்வு உதிர்வு
3 பெப்ரவரி 2001 8 மே 2013
அமரர் ஜவீன் ஜணன்
சுவிஸ் சூரிச்சைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்டிருந்த ஜவீன் ஜனனி, ஜவீன் ஜணன் ஆகியோரின் 1ம் ஆண்டு நினைவஞ்சலிகள்.
எங்கள் அன்பு மகளே ஜனனி
அம்மன் திருவுருவே அன்பின் உறைவிடமே
அங்கமெல்லாம் நிறைந்தவளே ஜனனிக்குட்டியே
அழகாய் பூத்துக் குலுங்கிய எம் குடும்பம் இன்று
கண்ணீர்ப் பூக்களை சுமந்து தவிக்கின்றது
எங்கள் செல்வ மகளே, எங்கள் குடும்பத்தின்
மூத்த குல விளக்கே, எங்கு சென்றாயோ?
நீ இல்லாத எம் வாழ்க்கை சூனியமாகி விட்டதம்மா
சுற்றிலும் உன் புன்னகை முகம் தான் தெரிகிறது.
சித்தி சித்தி என்று இறுக்க கட்டியணைத்து
முத்தமிட்டு கன்னத்தைக் கிள்ளும் என் அருமை மகளே!
என் செல்வமே எங்கு நீ சென்றாய்!
என்ன வாங்கி வர வேண்டும் என்று ஆசையுடன்
நூறு முறை கேட்பாயே அத்தனையும் நினைக்கையில்
இன்று கொதிக்குதம்மா இரத்தமெல்லாம்
உன் நினைவென்னை வாட்டுதம்மா
நித்தம் நித்தம் உன் நினைவுகளைச் சுமந்தபடி
இங்கு வாழ்கின்றோம்
பொத்தி பொத்தி வளர்த்த எங்கள் பெண் குஞ்சே இன்று
உன் புன்னகையின் பிஞ்சு முகம் காணாமல்
துடிதுடித்துப் போகின்றோம்
ஓராண்டு ஆகின்றது உன் அழகு தமிழ் பாட்டு கேட்டு
நாங்கள் இங்கு தினமும் தேடி அலைகின்றோம்
உன் திருவுருவைக்கான
உன்னை இழந்து இன்று நாம் உருக்குலைந்து நிற்கின்றோம்
எங்கள் அன்பு மகனே ஜனண்
பாசத்தின் வற்றாத ஊற்றே
என் செல்வ மகனே எல்லா உறவுகளையும்
அன்பாய் முறை சொல்லி அழைப்பாயே
அம்மம்மா தாத்தா என்று செல்லமாய் அழைப்பாயே
பெரியம்மா பெரியப்பா என்று புன்னகையுடன் அழைப்பாயே
சித்தி சித்தப்பா என்று வாயாரக் கூப்பிடுவாயே
மாமா மாமி என்று பகிடி கதைகள் சொல்லி அழைப்பாயே
எல்லா உறவுகளும் உனக்கு இருந்தும்
நீ எங்களை விட்டு சென்று விட்டாய் ஐயா
ஆய கலைகள் யாவும் பெற்று
இவ்வுலகை ஆழ்வாயென்று
பலநூறு கனவு கண்டேன்
கற்பனையில் நாம் மிதந்தோம்
எல்லாம் கருகியது கானல் நீர் ஆனதுவே
சித்தி வீடு என்று உறவு சொல்லி ஓடி வரும்
என் இரு செல்வங்களே இன்று நீங்கள்
இல்லையே எனக்கு உறவு சொல்லி ஓடிவர
உங்கள் சிரிப்பொலி இன்னும் எனது காதுகளை
இரைந்த வண்ணம் இருக்கின்றது
நீங்கள் இல்லையென்பது இன்னும் தான்
ஏற்க மறுக்கின்றது என் மனம் ஏனெனில்
என் இதயத்தில் நீங்கள் வாழ்கின்றீர்கள்
ஆண்டு ஒன்று சென்றாலும் அழியாது
உங்கள் நினைவுகள் எம் நெஞ்சில்.
எம் குடும்பத்தின் மூத்த முத்துக்களே
எம்மையெல்லாம் விட்டு சென்றதெங்கோ
அன்னையவள் மடியில் தவழ்ந்து தமிழ்மணம்
மணக்க மணக்க தமிழ்மண்ணில் தான் மடிந்தீர்களே
அவ்வளவிற்கு உங்கள் தாய்மீதும் தாய்மண்ணின் மீதும்
தமிழ்மீதும் நீங்கள்வைத்த பற்றுத்தான் என்ன?
உலகத்தையே வியக்க வைத்த
உத்தம புத்திரர்களே இதுதான்
மனித வாழ்கை என்ற தத்துவத்தை எடுத்துரைத்த முத்துக்களே எங்கள்
எல்லோரையும் உங்களுக்கு பிடிக்கவில்லையா
முத்துப்போன்ற சிரிப்பும் கலகல என்று
பேசும் குரலும் சித்திக்குட்டி என்று அழைக்கும் அழைப்பும்
ஒரு நொடியில் சிதைந்து போனதெங்கோ
அக்கா என்றழைக்க யாருமில்லையே
உன் தம்பியர்க்கு
நீங்கள் ஏறிய மேடைதான் எத்தனை
வாங்கிய வெகுமதிதான் எத்தனை
நீங்கள் சுற்றித்திரிந்த நாடுதான் எத்தனை
நீங்கள் செய்த தொண்டுதான் எத்தனை
உங்கள் பெருமையை கூறிக்கொண்டே போகலாம்
அத்தனையும் சுக்குநூறாகி விட்டதே
நீங்கள் இருவரும் பூவுலகில் தான் ஒற்றுமையாக வாழ்ந்தது
மட்டுமல்லாது தேவலோகத்திற்கும்
ஒற்றுமையாக செல்ல வேண்டுமா?
ஒரு நொடி ஒரு நிமிடம் ஒரு மணி என்று
ஒரு வருடமாக உங்கள் ஆத்மா சாந்திக்காக பிரார்த்திக்கின்றோம்.
தகவல்
வஜந்தி(சித்தி), சுகந்தி(சித்தி)