1ம் ஆண்டு நினைவஞ்சலிகள் ..!!
பிறப்பு இறப்பு
20 டிசெம்பர் 1996 6 மே 2013
அமரர் ஜவீன் ஜனனி
பிறப்பு இறப்பு
3 பெப்ரவரி 2001 8 மே 2013
அமரர் ஜவீன் ஜணன்
சுவிஸ் சூரிச்சைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்டிருந்த ஜவீன் ஜனனி, ஜவீன் ஜணன் ஆகியோரின் 1ம் ஆண்டு நினைவஞ்சலிகள்
அன்னார், ஜவீன் ஜெயந்திமாலா தம்பதிகளின் செல்வக் குழந்தைகளும் ஆவார்.
ஆறாத துயரினில் ஆண்டொன்று போனதோ?
மாண்டு நாம் போனதில் மறு ஆண்டு வந்ததோ?
தொண்டு நாம் செய்ததில் தொடர்புதான் இல்லையோ?
என்று தான் உமை எங்குதான் காண்பமோ?
காணாத கனவெல்லாம் கண்டு நாம் மகிழ்ந்து தான்
பெறாத பேறுகளை பெற்றுத்தான் மகிழ்தோமே!
பாராட்டும் சீராட்டும் பலராலும் கிடைக்கையிலே
கந்தன் காலடியில் கால்கடுக்க நின்றுதான்
கற்காத கலையெல்லாம் கற்றுத்தான் தீர்ந்ததென்று
காணாமல் போனீரோ? குஞ்சுகளே!
எம்மைக் கலங்கத்தான் விட்டீரோ? குஞ்சுகளே!
கண்டவரெல்லாம் கை குலுக்கிச் செல்கையிலே
பார்த்தவரெல்லாம் பாராட்டி மகிழ்கையிலே!
பல்கலையும் நீர் கற்று பாரெங்கும் புகழ் பெற்று
பல்லாண்டு நீர் வாழ, அதைப்பார்த்துத்தான் நாம் வாழ,
காத்துத்தான் கிடந்தோமே கண் மணிகாள்,
இப்போ கண்ணீரில் மிதக்குறோமே பொன்மணிகாள்,
எப்போதும் மறவாமல் தப்பாது நினைவு வரும்
அம்மாவென்றழைத்தபடி அப்பாவென்றழைத்தபடி
ஏதோ ஒரு மூலையில் இருந்தோடி வருவீரோ?
எங்கள் செல்வங்கள் என்றெண்ணி ஏங்குவதால்,
அம்மா என்ற குரல் கேட்டால் அலறிப்புடைக்கின்றோம்,
அப்பா என்ற குரல் கேட்டால் அங்கேயே நிற்கின்றோம்,
அனலில் இட்ட புளுவாய் அன்றாடம் துடிக்கின்றோம்
தணல் கக்கும் எரிமலையாய் தவியாய் தவிக்கின்றோம்
கண் மூடிக்கிடக்கையிலும் கண்ணுக்குள் நிற்கிறீரே!
விண் பார்த்துக் கிடக்கையிலும் விழி நிறைந்து வழிகிறதே!
தேற்ற வருபவரும் தேம்பி அழுகையிலே
கண்டு செல்பவரும் கண்கலங்கிச் செல்கையிலே!
உமைக் கவர்ந்திட்ட காலனவன் கண் குறுடாய் போனானோ?
இனி எப்பிறப்பில் உமைக்கண்டு எங்கள் உள்ளம் பூரிக்குமோ?
அப்பிறப்பு வரும் வரைக்கும் இப்பிறப்பு முழுவதும் எங்களுக்கு நரகம்தான்
எம் குழந்தைகளின் ஆத்மா சாந்தியடைய எம் கண்ணீர்
அஞ்சலிகளை காணிக்கையாக்கி எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கின்றோம்.
தகவல்
ஜவீன் ஜெயந்தி(பெற்றோர்)