துயர் பகிர்கின்றோம்….!!!

கண்டியைப் பிறப்பிடமாகவும் கிளிநொச்சி ஜெயந்திநகரை வாழ்விடமாகவும் கொண்ட அமரர். தோழர் பெருமாள் விஜயன்….

மலர்வு:
1964.04.03
உதிர்வு:
2015.08.25

கால்கடுக்க நடந்து
கடுந்தவம் புரிந்து
கழகப்பணி செய்த
காலங்கள்மறந்திடுமா?
அந்தக் கனவுதான் மறந்திடுமா?
நந்தவன நாட்கள் நம்மை விட்டுப் பிரிந்திடுமா?
எங்கள் விஜயன் தோழரை மறக்கத்தான் முடிந்திடுமா?

நெஞ்சினிலே தீ-வளர்த்து
நெருப்பினைத் தான் சுமந்து
பஞ்சனை வெறுத்து இளமை பள்ளி பருவத்திலே
எல்லாமே துறந்து – எளிமை விரதம் பூண்டு
அனைத்துலக அடக்கு முறைகளை
உடைத்தெறிய புறப்பட்ட எங்கள் விஜயன் தோழரே
ஏன் எம்மை விட்டு போனீர்கள்??..

கழக பாசறைப் பள்ளிகளில்
பக்குவமாய் பயின்றவரே
ஆரம்ப காலத்தில் விடுதலைக்காயும்
மண்ணுக்காயும் மக்களுக்காயும்
பூசாவில் வாடிய புனித தோழன் நீ
இன்று கழகக் தோழர்களை
கண்ணீர் விட வைத்தீர்கள்..

இறுதி நேரத்தில் கழகத்தின் வெற்றிக்காய்
காத்திரமாய் எத்தனை பணிசெய்தீர்
முகிழ் கூட்டங்களும் எம்மோடு சேர்ந்து
மூகாரி பாடும் இந்நேரம் -எம்
தோழனே!
உன் எண்ணங்கள் ஈடேறும்
அதுவரை காத்திருப்போம்
கவலையின்றிப் போய்வா!..

எதிர்காலத்தை வெல்வதற்கு
கழகத் தோழர்கள் காத்திருப்பார்,
அன்புத் தோழனே நாம் ஆறாத்துயர் சுமந்து
உமக்கு அஞ்சலித்து நிற்கின்றோம்..!!

இவர்தம் பிரிவால் வாடிநிற்கும் துணைவி, பெற்றோர், உறவுகள், நட்புகளோடு நாமும் எமது பெருந்துயரைப் பகிர்ந்து கொள்கின்றோம்.

தமிழீழ மக்கள் விடுதலை கழகமும் (PLOTE)
ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணி (DPLF)

Plote.Perumaal