மரண அறிவித்தல் – மலர்வு – 13.03.1952 உதிர்வு – 18.04.2016

யாழ்ப்பாணத்தைப் பிறப்பிடமாகவும், மட்டக்களப்பு புதுநகரை வசிப்பிடமாகவும் கொண்ட பெனடிக்ட் தனபாலசிங்கம் அவர்கள் (18.04.2016) திங்கட்கிழமை மட்டக்களப்பில் மரணமெய்தினார் என்பதை தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தினராகிய (புளொட்) நாம் மிகுந்த துயருடன் அறியத் தருகின்றோம்.

தனது இளம் பராயத்திலேயே சமூக சேவைகளில் அதிக நாட்டம் கொண்டிருந்த சிங்கம் அவர்கள், தனது ஆரம்ப அரசியல் பணிகளை தமிழரசுக் கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் திரு. செ.இராஜதுரை அவர்களுடன் இணைந்து பணியாற்றியதன் மூலம் முன்னெடுத்திருந்தார்.
1983ல் புளொட் அமைப்பில் தன்னை இணைத்துக் கொண்ட தோழர் சிங்கம் அவர்கள், கழகத்தின் சிரேஸ்ட உறுப்பினராகவும், ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணியின் மத்திய குழு உறுப்பினராகவும், கட்சியின் உப தலைவர்களுள் ஒருவராகவும் இன்றுவரை தொடர்ச்சியாக இடையறாது தனது மக்கள் பணியினைத் தொடர்ந்தார்.

மட்டக்களப்பு மாநகர சபையின் முன்னாள் உதவி மேயரும், சாவகச்சேரி நகரசபையின் முன்னாள் நகரபிதாவுமான பெனடிக்ட் தனபாலசிங்கம் (சிங்கம்) அவர்கள், மக்கள் பணிகளிலே சிறப்பான செயற்திறனை வெளிப்படுத்தி மக்கள் மத்தியில் அன்பையும் நன்மதிப்பையும் பெற்றிருந்தார். அவர், மட்டக்களப்பில் மாத்திரமல்லாது யாழ், வன்னி மாவட்டங்களிலும் மக்களுக்கான தனது அர்ப்பணிப்புமிக்க அரசியல் பணிகளை மேற்கொண்டிருந்தார்.

அன்னாரின் இழப்பு அவரது குடும்பத்தினருக்கு மட்டுமல்லாது தமிழ் மக்களுக்கே ஒரு பேரழிப்பாகும். அன்னாரின் பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினர், உறவினர் மற்றும் நண்பர்களோடு புளொட் அமைப்பினராகிய நாமும் இப்பெருந்துயரினை பகிர்ந்து கொள்வதோடு, துயரத் தோய்ந்த எமது அஞ்சலியையும் சமர்ப்பிக்கின்றோம்.

தமிழீழ மக்கள் விடுதலைக் கழகம் (PLOTE)
ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணி (DPLF)

குறிப்பு – அன்னாரின் பூதவுடல் அவரது புதுநகர் இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளதோடு இன்றுமாலை 4.00மணியளவில் அன்னாரின் இறுதிக் கிரியைகள் இடம்பெறவுள்ளது.

தொடர்புகட்பு : (0779818459 – கேசவன்)

frames-design1t