விழிநீர் அஞ்சலிகள் – அமரர் முத்துலிங்கம் பிறேமாவதி அவர்கள்

மலர்வு. 10.08.1954 உதிர்வு. 08.05.2015

யாழ். கொட்டடியைப் பிறப்பிடமாகவும், பெரியமணல், காரைநகரை வதிவிடமாகவும் கொண்டவரும், எமது சிரேஸ்ட உறுப்பினர் குமரேசன் மோகனதாசன் (காந்தன் – சுவிஸ்) அவர்களின் மூத்த சகோதரியுமான முத்துலிங்கம் பிறேமாவதி அவர்கள் நேற்று (08-05-2015) காலமானார் என்பதை மிகுந்த துயருடன் அறியத்தருகின்றோம்.

அன்னாரின் பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினர், உறவினர் மற்றும் நண்பர்களோடு தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தினராகிய (புளொட்) நாமும் இப்பெருந்துயரினை பகிர்ந்துகொண்டு, எமது அஞ்சலியினை சமர்ப்பிக்கின்றோம்.

அன்னாரின் பூதவுடல் அவரது காரைநகர் இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. இறுதிக் கிரியைகள் பற்றிய தகவல்களுக்கு கீழ்வரும் இலக்கங்களுடன் தொடர்பு கொள்ளவும். 0041 787443082 (சுவிஸ்), 0094 766262580 (இலங்கை)

-புளொட் PLOTE-

frames-design1f