எமது அன்புத் தந்தையின் நினைவு “திதி தினம்” (24.11.14)..!!
9ம் ஆண்டு நினைவஞ்சலி!!!
அமரர். முருகேசு சொக்கலிங்கம்
(உரிமையாளர் ஆனந்தா புத்தகசாலை & ஆனந்தா அச்சகம் -மருதானை)
15.10.1926 – 05.12.2007
பிறப்பு- புங்குடுதீவு /// இறப்பு- லண்டன்

அன்பின் உருவமாய்!
அமுதச் சுரபியாய்!!
பண்பின் வடிவமாய்!!
பாசத்தின் பிறப்பிடமாய்!!
என்றும் எம் உள்ளத்திலும், உயிரிலும்
இரண்டறக் கலந்திட்ட
எம்முயிர் தந்தையே!!

ஒன்பதாண்டு சென்றதுவோ…
எமை விட்டு நீர் சென்று..
வேர் அறுந்து போனதுவோ..
விழுதுகளைப் பரப்பி விட்டு..

பாரில் எமைப் படைத்து..
பண்புடனே வாழ வைத்து..
அழகு பார்த்த அப்பாவை..
அனுதினமும் தேடுகிறோம்…

எங்கள் தாய் நாட்டை நினைத்தால்,
உங்கள் தாகம் புரிகிறது…
எங்கள் சொந்த ஊரை எண்ணினால்,
உங்களைப் பற்றி தெரிகிறது…

எங்களுக்கு முன்னே உள்ள,
இருக்கின்ற அனைத்திலும்..
ஏதோ ஒரு வடிவத்தில்,
எங்கள் அப்பா தெரிகின்றார்..

காணும் இடமெல்லாம்,
கரைந்து நிக்கும் அப்பாவை..
காலம் உள்ளவரை.., -அப்பாவை,
கண்களில் தேக்கி வைப்போம்..

ஆண்டுகள் மாறி வரும்,
அதில் உங்கள் நினைவு நாள் வரும்.. -ஆயினும்,
உயிர் வாழுகின்ற காலம் வரை..
மனதில் உங்கள் நினைவு இருக்கும்..!!!

-பிள்ளைகள், மருமக்கள், பேரப்பிள்ளைகள் & உற்றார், உறவினர்கள்.. –