அமரர் வேலாயுதன் பார்த்தீபன் (பாபு ) 25ம் ஆண்டு நினைவஞ்சலி!!!
(முன்னால் உரிமையாளர் -பாபு ரெஸ்டுரன்ட் வவுனியா, சந்திரிகா மில் வேப்பங்குளம் )
மலர்வு -11.03.1963
உதிர்வு -23.05.1989
திதி -31.05.2014

காடையர்களினால் காவு கொள்ளப்பட்டு
கால் நூற்றாண்டானது
பாபு என்ற ஈரெழுத்தின் இறுதி மூச்சு
தரணியில் தடைசெய்யப்பட்டு
இருபத்தைந்தாண்டுகள் இல்லாமல் போச்சு
காருண்யம் களவு போய்
காடைத்தனங்களின் கர்ப்பப்பைகள் நிரப்பபட்டு
குறைமாத பிரசவங்களின் குதூகலம்
ஓர் உயிர் பறிப்பின் மூலம் ……நிறைவேறியது
இருந்து பார் -பார்த்தீபா ……….
கறைகள் களையப்பட்டு …..
புல்லுருவிகள் புடுங்கபட்டு ……..
பிணம் தின்னி கழுகுகளின் கழுத்து நெறிக்கபட்டு…
புது பிரசவங்களின் பிறப்புக்கள் ………
நாளை பிறப்பெடுக்கும் ………….
அப்போது வா பார்த்தீபா ………..
உனக்காக எங்கள் இதயங்களும் ,
கருப்பை பைகளும்
காத்திருக்கின்றன…….
உங்கள் நினைவுகளுடன்
எம் இதயங்களில் உங்கள் புகைப்படம் …….

உங்களின் ஆத்மா சாந்திக்காக பிரார்த்தித்து நிற்கும்..,
அன்பு மனைவி ,பிள்ளைகள் ,சகோதரன் ,சகோதரி
மற்றும் உற்றார் ,உறவினர்கள்.

இல.04
2ம் ஒழுங்கை ,
கதிரேசு ஒழுங்கை ,
வைரவபுளியங்குளம் ,
வவுனியா