மரண அறிவித்தல்
கிருஷ்ணர் கமலசிங்கம்

வடலியடைப்பு, பண்டத்தரிப்பை பிறப்பிடமாகவும், கொக்குவில் மேற்கை வசிப்பிடமாகவும் கொண்ட கிருஷ்ணர் கமலசிங்கம் அவர்கள் கடந்த செவ்வாய்க்கிழமை (17.12.2013) அன்று இறைபதம் எய்தினார்.

அன்னார் காலம் சென்றவர்களான அம்பலவாணர் கிருஷ்ணர் – நாகேஸ்வரி தம்பதியினரின் அன்பு மகனும்,

யோகரத்தினம் (உதவி அதிபர் யா/ மானிப்பாய் மெமோரியல் ஆங்கிலப் பாடசாலை) அவர்களின் அன்புக் கணவரும்,

காலம் சென்ற கஜன், குமுதினி (பொறியியலாளர் – மத்திய பொறியியல் உசாத்துணைப் பணியகம்), கஜீரன் (பதவி நிலை உத்தியோகர் – இலங்கை வங்கி, திருநெல்வேலி), குயிலினி (தாதிய உத்தியோகத்தர் – போதனா வைத்தியசாலை, யாழ்ப்பாணம்) ஆகியோரின் அன்புத் தந்தையும்,

சுதந்திராதேவியின் அன்புச் சகோதரரும்,

சரஸ்வதி (ஓய்வு பெற்ற ஆசிரியை – யாழ்ப்பாணக் கல்லூரி), சண்முகநாதன் (retired Managing Consultant – Finco Group of Companies), காலம் சென்ற யோகநாதன் (Unit Superintendent – Sri Lanka Ports Authority), லீலாவதி (ஓய்வு பெற்ற ஆசிரியை – செம்மலை மகா வித்தியாலயம், முல்லைத்தீவு) ஆகியோரின் அன்புப் பெறாமகனும்,

ஜனார்த்தனி (அபிவிருத்தி உத்தியோகத்தர், பிரதேச செயலகம் – நல்லூர்), சுரேஷ் (வைத்திய அதிகாரி, போதனா வைத்தியசாலை- யாழ்ப்பாணம்) ஆகியோரின் அன்பு மாமனாரும்,

காலம் சென்ற லட்சுமி (வைத்திய அதிகாரி), தியாகராஜா ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

ரிஷிகேசன், ஹாசினி, ஹர்ச்சனா ஆகியோரின் அன்புப் பேரனும்,

விக்னேஸ்வரன், பிரபாகரன், யாழினி ஆகியோரின் அன்புச் சித்தப்பாவும்.., தர்மேந்திரா, யாழரசி, எழிலரசி, திருவரங்கன் ஆகியோரின் அன்புச் சகோதரி வழி மாமனாரும் ஆவார்.

அன்னாரின் இறுதிக் கிரியைகள் புதன்கிழமை (18.12.2013) மு.ப. 11.00 மணிக்கு அவரது இல்லத்தில் நடைபெற்று, கோம்பயன் இந்து மயானத்தில் தகனக் கிரியைகள் நடைபெற்றது.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறோம்.

“லக்ஷ்மி மஹால்”
வராகி அம்மன் வீதி,
கொக்குவில் மேற்கு,
கொக்குவில்

தகவல்;
குடும்பத்தினர் சார்பாக சிம்கராஜ் K. வர்மா