மாமனிதர் குமார் பொன்னம்பலம் அவர்களின் 15ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும்.
தமிழின அழிப்புக் கொள்கையை அம்பலப்படுத்தியவரும், மனித உரிமைவாதியும், சட்டத்தரணியுமான திரு. குமார் பொன்னம்பலம் அவர்கள் கொழும்பில் 05.01.2000 அன்று சுட்டுக் கொல்லப்பட்டார்.
சிங்களத் தலைநகரில் தனித்து நின்று சிங்களப் பேரினவாதத்திற்கு சவால் விடுத்து. ஆபத்துக்கள் சூழ்ந்திருந்த போதும் அஞ்சா நெஞ்சத்துடன் அநீதியை எதிர்த்துப் போராடியவர் திரு. குமார் பொன்னம்பலம் அவர்கள்.
இவரின் இனப்பற்றிற்கும் விடுதலைப் பற்றிற்கும் மதிப்பளித்து, அவரது நற்பணியை கெளரவிக்கும் முகமாக தமிழீழத் தேசியத் தலைவர் அவர்களால் இவருக்கு மாமனிதர் விருது வழங்கப் பட்டது.
(EelamRanjan – London)