இரண்டாவது நினைவஞ்சலி செல்வி. பரம்சோதி செல்வநிதி..!!!

பெற்றெடுத்த தாயைப் போல..
பேணிப் பேணி வளர்த்தவளே..
வற்றாத அன்புதனை..
பாசத்தோடு தந்தவளே…

உற்றம் சுற்றம் உயர்வுக்காய்..
உன்னை.. உருக்கிக் கொண்டவளே..
ஊருக்காக இல்லாமல்..
எமக்காக வாழ்ந்தவளே..

எம் வாழ்வு உயர்வுக்காய்..
உன் வாழ்வை ஒதுக்கி வைத்து..
பொத்திப் பொத்தி எமை வளர்த்து..
கட்டிக் காத்துக் கொண்டவளே..

மீண்டும் இந்த மண்ணில் வந்து..
உன் முகத்தை காட்ட வேணும்
உன் பாதம் மண் எடுத்து..
எம் உடம்பில் பூச வேண்டும்..

ஆண்டுகள் மாறினாலும்..
ஆறாது எங்கள் சோகம்..
மறுபிறப்பில் நாங்கள் வந்து..
உன் மடியில் பிறக்க வேண்டும்..

— அன்பு அக்கா, அத்தார், பெறா மக்கள்..
சிந்துயன் & சிந்துயா– சுவிஸ்.

(* இதேவேளை மேற்படி அமரர் செல்வி.செல்வநிதி அவர்களின் இரண்டாவது நினைவஞ்சலியை முன்னிட்டு சில சமூக சேவை உதவிகள் “அதிரடி” இணையம், மற்றும் புங்குடுதீவு “தாயகம்” அமைப்புகளின் ஊடாக “திரு.திருமதி பனீர்செல்வம் சிவநிதி” குடும்பத்தால் நடைபெற்றது குறிப்பிடத் தக்கது.. இதுகுறித்த விரிவான செய்திகள் “அதிரடி” இணையத்தில் வெளியாகும்.. -“அதிரடி” நிர்வாகம்)

selvanithi