2ம் ஆண்டு நினைவஞ்சலிகள்…!!!

அமரர் ஜனனி ஜவீன்..
அன்னை மடியில்
20 டிசெம்பர் 1996
ஆண்டவன் அடியில்
0 6 மே 2013

அமரர் ஜணன் ஜவீன்..
அன்னை மடியில்
3 பெப்ரவரி 2001
ஆண்டவன் அடியில்
08 மே 2013

Swiss Zurichஐப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்டிருந்த ஜனனி ஜவீன், ஜணன் ஜவீன் ஆகியோரின் 2ம் ஆண்டு நினைவஞ்சலிகள்…!!

மீளாத் துயரினில் மீண்டும் ஒரு ஆண்டு
ஆறாத் துயரினில் அழுதே கழிகிறதே!

கலையாத கவலைகள் நிலையான துயரங்கள்
நீங்காத நினைவுகள் நிலை தெரியா உறவுகள்

மாறாத காயங்கள் தேறாத உள்ளங்கள்
மீளாத துயரங்கள் தாளாத சோகங்கள்
இத்தனைக்கும் மத்தியில் இன்னமொரு ஆண்டு

எம் கண்களாயிருந்த கண்மணிகள்
மறைந்து போய் மீளாத் துயரத்தில்
மீண்டுமொரு ஆண்டு மின்னலென மறைந்ததோ?

கரம் பிடித்த வாழ்க்கையிலே வரம் இரண்டு வாய்த்ததென்று
மனம் முழுக்க மகிழ்ச்சியிலே தினம் மகிழ்ந்து
வாழ்ந்தோமே செல்வங்களே

இப்போ தினம் உருகி உயிர் போக
மனமுருகி மாழ்கின்றோம் செல்லங்களே
தினமுடைந்து போகின்றோம்

படுக்கும் போதும் உங்களைத் தான்
அணைத்தபடி படுத்தோமே!
நடக்கும் போதும் உங்களைத் தான்
கை பிடித்து நடந்தோமே!

இப்போ நீங்களில்லா படுக்கை கூட
நிலையிழந்துத் தவிக்கிறதே!
நாம் சேர்ந்து நடந்த பாதை கூட
நெருஞ்சி முள்ளாய்த் தைக்கிறதே!

தாங்கிக் கொள்ளத் தோள் இருந்தும்
சாய்ந்துக் கொள்ள ஆளில்லையே!
தேம்பித் தேம்பி அழுத பின்பும்
தெளிவுக் கொள்ள முடியவில்லையே!

தாவியோடி நீங்கள் வர பாதையோரம்
நாமும் வர பாவி மனம் துடிக்கிறதே!
பருதவித்துத் தவிக்கிறதே

தவறு செய்யா எங்களுக்குத் தண்டனையை
தந்து விட்டு தவிக்க விட்டுப் போனதென்ன
தர்மத்தின் பாதையிதோ?

உறவுகளைக் கண்டு விட்டால்
உதடு மட்டும் சிரிக்கிறது
உள்ளம் தேம்பி அழுகிறது
மனது படும் பாட்டினிலே
மாண்டுவிடத் தோன்றுறதே!

எம் குழந்தைகளின் ஆத்மா சாந்தியடைய
எம் கண்ணீர் அஞ்சலிகளை காணிக்கையாக்கி
எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்.
ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!

தகவல்
ஜவீன் ஜெயந்தி(பெற்றோர்)

01.janann-a