திருமதி இராஜேஸ்வரி செல்லத்துரை

மண்ணில் 31.08.1940 விண்ணில் 23.03.2017

புங்குடுதீவு 9ஆம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், கிளிநொச்சி, கொழும்பு ஜெம்பட்டா வீதியை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த திருமதி இராஜேஸ்வரி செல்லத்துரை அவர்கள் 23.03.2017 வியாழக்கிழமையன்று காலமானார்.

அன்னார் காலஞ்சென்ற செல்லத்துரையின் அன்பு மனைவியும், காலஞ்சென்ற ஜீவரத்தினம் அன்னப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற நல்லதம்பி பார்வதி தம்பதிகளின் அன்பு மருமகளும்,

சதானந்தன்(சதா) (சுவிஸ்), விவேகானந்தன்(விவே)சுவிஸ்), கலையரசி(உஷா)(சுவிஸ்), சிவானந்தன்(சிவா)(கனடா) ஆகியோரின் அன்புத்தாயாரும், வசந்தரூபனின் வளர்ப்புத்தாயாரும்,

கஜநிதி(சுவிஸ்), லுஜிதா(சுவிஸ்), ஜெகன்(சுவிஸ்), ரஜிதா(கனடா) ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,

நிசாத்(சுவிஸ்), சக்ஸ்சனா(சுவிஸ்), நவீன்(சுவிஸ்), திவ்யா(சுவிஸ்), ஜெனிபன்(சுவிஸ்), அபிஷன்(சுவிஸ்), அபிஷேக்(சுவிஸ்), அஸ்வின்(கனடா), அஜிஷ்(கனடா) ஆகியோரின் பேத்தியுமாவார்.

அன்னாரின் பூதவுடல் 24.03.2017 இன்று வெள்ளிக்கிழமை மற்றும் 25.03.2017 நாளை சனிக்கிழமை காலை 10.00 மணிமுதல் மாலை 4.00மணிவரை அஞ்சலிக்காக பொரளை ஜெயரட்ண மலர்ச்சாலையில் வைக்கப்பட்டு 26.03.2017 ஞாயிற்றுக்கிழமை காலை 10.00 மணியளவில் இறுதிக்கிரியைகள் நடைபெற்று பிற்பகல் 1.00 மணியளவில் தகனக்கிரியைகளுக்காக பொரளை பொது மயானத்திற்கு எடுத்துச் செல்லப்படும்.

இவ்வறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவருக்கும் அறியத்தருகின்றோம்.

தகவல்: பிள்ளைகள்
தொடர்புகளுக்கு: சதா – 0040 788 518 748, 076 532 5982 (Viber)
விவே – 0041 789 063 464, 076 532 5877 (Viber)