“கண்ணீர் அஞ்சலி”

மலர்வு: 26.06.1961 – உதிர்வு: 14.03.2014

திருமதி குலதேவி தர்மகுலசிங்கம்

குலவிளக்காய் வந்த எங்கள் குலதேவியே
அன்னையாய் அருமை சகோதரியாய்
அறிவும் அன்பும் நிறைந்தவளாய்
அமைதியானவளாய்! அதிர்ந்து பேசாதவளாய்!
அனைவர்க்கும் அறிமுகமானவளே
சைவமும் தமிழும் தழைத்தோங்க நின்றவளே..

அன்புச் செல்வங்கள் இரண்டு
அருமையாய் ஆண்ணொன்றும் பெண்ணொன்றும்
அறிவார்ந்த பிள்ளைகள் பெற்றவளென்று
பெருமை கொண்டிருந்தோமே…

அனைவரையும் பரிதவிக்கவிட்டு – நின்
ஆத்மா எமை விட்டு பிரிந்து போனதேனோ?
சொல் சகோதரியே சொல் – நீ
கட்டிய கணவன் கண்ணீரில் கரைகின்றான்- நீ
கவலையில்லாமல் எப்படி துயிலுகின்றாய்?
கண்விழித்து ஒருமுறை பாராயோ

காலம் முழுவதும் நீ எம்மோடு
வாழ்வாய் என்றெண்ணியிருந்தோம்
காத்திருக்க பொறுக்காமல் காலனவன்
உனை கவர்ந்து சென்று விட்டானே

கண்ணுக்குள் நீ இன்னும் நம்மோடு வாழ்கின்றாய்
கலைமகள் உன் காருன்யாவின் கால்கள்
நடனமாடும் காட்சிதனை காண நீ வரமாட்டாயோ
கண்ணீரில் தவிக்கின்றோம் சகோதரியே

உன் ஆத்மா சாந்தியடைய உளமாற பிரார்த்திக்கின்றோம்

மோகன் குடும்பம்
Romanel- sur- lausanne