திருமதி சிவராசா பாக்கியம் (வதி) அவர்கள்

மலர்வு 27.09.1943
உதிர்வு 17.06.2016

சுழிபுரம் கிழக்கை பிறப்பிடமாகவும், வைரவப்புளியங்குளம் வவுனியாவை வாழ்விடமாகவும் கொண்ட சிவராசா பாக்கியம்(வதி) அவர்கள் இன்று (17.06.2016) வெள்ளிக்கிழமை காலமானார்.

அன்னார் காலஞ்சென்ற கந்தையா(மாடர்) – நல்லபிள்ளை ஆகியோரின் அன்பு மகளும், காலஞ்சென்ற சரவணமுத்து – அன்னப்பிள்ளை ஆகியோரின் அன்பு மருமகளும், காலஞ்சென்ற சரவணமுத்து சிவராஜா (வவுனியா ப.நோ.கூ.ச. களஞ்சிய பொறுப்பாளர்) அவர்களின் அன்பு மனைவியும்

வே.ஆசையத்தை, க.ஆறுமுகசாமி (பாலமோட்டை ப.நோ.கூ.ச முகாமையாளர் – பிரான்ஸ்), காலஞ்சென்ற க.செல்லத்துரை(அப்புக்காத்து) (வாழைச்சேனை கடதாசி ஆலை பொறியியலாளர்), க.அப்புத்துரை(கடவுள்), க.சறோஜினிதேவி, க.சிவலிங்கம், க.ராணி ஆகியோரின் அன்புச் சகோதரியும்

சி.இராசசிங்கம் (கருணைவேல், ராஜன்); – நோர்வே, சி.கணேசன்(சங்காரவேல்) – கனடா, திருமதி அன்னவதி(அன்னம்)வனநாதன் – லண்டன், சி.நவநீதன்(நீதன்) (வவுனியா) ஆகியோரின் அன்புத் தாயாரும்,

கைராசிப்பிள்ளை- வெள்ளவத்தை, பூமாதேவி-வெள்ளவத்தை, தவகுணராசசிங்கம், தங்கம்- கனடா, செல்வலக்சுமி(ராசாத்தி) –வவுனியா, ஆகியோரின் அன்பு மைத்துனியும்

அன்புமலர்(அன்பு) – நோர்வே, சுபாசினி(வவா) – கனடா, வனநாதன்(ரவி) – லண்டன், கீதாமலர்(கீதா) – வவுனியா ஆகியோரின் அன்பு மாமியாரும், கமலன், கௌசிகா, ஆகீசன், அபிஷன், குகன், நிதீபன், கபிலன், கஸ்தூரி, காயத்ரி ஆகியோரின் அன்புப் பேத்தியுமாவார்.

அன்னாரின் பூதவுடல் சந்தை வீதி, சுழிபுரம் கிழக்கு, சுழிபுரம் என்ற முகவரியில் அமைந்துள்ள அன்னாரது இல்லமான அன்னவதி இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது.

அன்னாரின் இறுதிக்கிரியைகள் பற்றிய விபரங்கள் பின்னர் அறியத்தரப்படும்.
இவ்வறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளும்படி தாழ்மையுடன் கேட்டுக்கொள்ளுகின்றோம்.

தகவல் : குடும்பத்தினர்

தொடர்புகட்கு:
இ.இராசசிங்கம் (கருணைவேல் – ராஜா) – நோர்வே – 0047 906 082 71
,, – இலங்கை – 0094 77 589 11 54
நீதன் – வவுனியா – 0094 24 222 28 88
அன்புமலர் – யாழ்ப்பாணம் – 0094 21 490 36 91

frames-design1ab