“திருமதி.சொக்கலிங்கம் சீதேவிப்பிள்ளை” -நாகேஷ் அக்கா (ஆறாமாண்டு நினைவஞ்சலி)

ஆறாய் ஓடும் கண்ணீர், ஆறாம் ஆண்டில்..
“திருமதி.சொக்கலிங்கம் சீதேவிப்பிள்ளை” (நாகேஷ் அக்கா)
பிறப்பு- புங்குடுதீவு இறப்பு- லண்டன்

ஆறாய் ஓடும் கண்ணீர், ஆறாம் ஆண்டில்..
=====================
அம்மா, உந்தன் குரல்கேட்டு..
ஆறாம் ஆண்டு ஆனதம்மா..
தும்மல் வந்தால் “அம்மா”
என்று சொல்லும் போது..
இதயம் வேகுதம்மா..

சொந்தம் என்று இருந்த “அம்மா”..
சொர்க்கம் போனது ஏனம்மா?..
துயரம் கொண்டு நாம் வாடும்,
துயரம் போக்க.. மீண்டும் வா “அம்மா”..

ஆண்டுகள் கடந்து போயிடினும்,
ஆற்றும் சோகம் தீர்ந்திடுமா?..
பாசம் கொண்ட எங்கள்,
“அம்மா”வின் ஞாபகங்கள் நீங்கிடுமா?..

புங்கை நகரின், சொந்தங்கள்..
“நாகேஷ் அக்காவை” தேடுகின்ற,
ஞாபகங்கள் வருகிறது..
கண்ணில் கண்ணீர் கரைகிறது..
யாரிடம் உங்களை தேடுவது?….

இறைவன் அழைத்த.. “அம்மா”வை,
எங்கள் மனதிலே பூஜிப்போம்..
ஆயுள்தந்த “அம்மா”வை..
அவனியில் உள்ளவரை..
நினைந்துருகி, ஆறாம் ஆண்டு
நினைவலையில்.. ஆத்மா சாந்தியடைய
இறைவனை பிரார்த்திப்போம்..

அன்பின் உருவமாய்! அமுதச் சுரபியாய்!!
பண்பின் வடிவமாய்;!! பாசத்தின் பிறப்பிடமாய்!!
என்றும் எம் உள்ளத்திலும், உயிரிலும்
இரண்டறக் கலந்திட்ட எம்முயிர் அன்னையே!!

ஆண்டுகள் ஆறு ஆனாலும், ஆறவில்லை நம் துயரம்!
நினைவில் எம்முடனும், நிஜத்தில் இறைவனிடமும் கலந்திட்ட
உங்கள் ஆத்மா சாந்திபெற இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்!!

-பிள்ளைகள், மருமக்கள், பேரப்பிள்ளைகள் & உற்றார், உறவினர்கள்…
மற்றும் புங்குடுதீவு “தாயகம் சமூக சேவையகம்” நிர்வாகம் & உறுப்பினர்கள்..