ஓராண்டு கண்ணீர் நினைவலை திருமதி.தவயோகராஜா வசந்தி -கொழும்பு

தோற்றம்
10.02.1959
சுருவில்

மறைவு
24.08.2012
கொழும்பு

திருமதி.தவயோகராஜா வசந்தி

அம்மா உங்களை நாமிழந்து
ஆண்டு ஒன்றாகினாலும்
அது ஆயிரமாண்டாய் தோன்றுதே
ஆறமுடியவில்லையே அம்மா

வசந்தமாய் என் வாழ்வில் வந்த
வசந்தியே உனைப் பிரிந்து ஓராண்டு
வலதுகரமின்றி வாடுகிறேன் ஒருயுகமாக
வருவாயா என்னிடம், தவிக்கின்றேன் வசந்தி

எமது தற்கால பிரிவை எண்ணி நீ தவிப்பாய்
என இருந்த எமை நிரந்தரமாய் தவிக்கவிட்டு
எங்கே நீ சென்றாய் என ஈன்ற மனமது
ஏங்கித் தவிக்குதடா வசந்தியம்மா

சகோதரியே உன்னை இழந்து நாம்
சந்தோசத்தை முற்றாய் இழந்து விட்டோம்
சகிக்க முடியவில்லை பன்னிரண்டு திங்களாய்
சுற்றமே மறக்கவில்லை உன் நினைப்பை

மச்சாளே உன் நினைப்பு முன்நான்கு மாதமாக
மரத்து விட்ட மனமாய் வாடுகின்றோம் -உமது
மருமக்கள் பெறாமக்கள் உடன்பிறவா சகோதரரும்
மறக்கத்தான் முடியுமா உன்னதமான உன் பாசத்தினை

எமது வசந்தமலரான வசந்தி உமது ஆத்மா சாந்திபெற
அன்புள்ளங்கள் அனைவரும் பிரார்த்திக்கின்றோம்.

தகவல்:- குடும்பத்தவர்கள்!!

தவயோகராஜா (கணவன்) 0094 75 612 04 68
மகேஷ்-வனிதா (சகோதரி) 0041 76 310 40 56
நடராஜா-சுசிலா (பெற்றோர்) 001 647 785 02 93
சிவா (உடன்பிறவா சகோதரன்) 0041 79 624 90 04

– See more at: http://www.athirady.com/tamil-news/infomation/261504.html#sthash.bEhWNVHV.dpuf