ஊர்காவற்றுறை கரம்பொனை பிறப்பிடமாக கொண்ட திருமதி பெரியநாயகி செல்லத்துரை அவர்கள் 25.05.2014 அன்று வவுனியாவில் இறைவனடி சேர்ந்தார்.

அன்னார் காலஞ்சென்ற சோமசுந்தரம்பிள்ளை – கதிராசிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற சுப்பிரமணியம் செல்லத்துரையின் மனைவியும்,

காலஞ் சென்றவர்களான சிவஞானவதி, தையல்நாயகி, சிவபாதசுந்தரம்பிள்ளை (முன்னாள் ரேடியோ சிலோன், பீ.பீ.சி தமிழோசை அறிவிப்பாளர்), தியாகராஜபிள்ளை (விதானையார்) ஆகியோரின் அன்புத் தங்கையும்,

வாகீஸ்வரி, வாமகேசி, பிரியதர்சனன், வாகீசன், நிருத்யா ஆகியோரின் அன்புமிக்க அம்மாவும், சர்வேஸ்வரன், மனோகரன், மனோரஞ்சனி, ரூபறஜினி, சிம்கராஜ்வர்மா (அலெக்ஸ்) ஆகியோரின் அன்பு மாமியும்,

கஸ்தூரி, வசீகரி, மதுரி, லஷ்மி, அபிராமி, யாதவன், மதுஷா ஆகியோரின் அன்பு பேத்தியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக் கிரியைகள் 27.05.2014 செவ்வாய்க்கிழமை வவுனியாவில் நடைபெறும்

இவ்வறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.

தொடர்புகட்கு:

வாகீஸ்வரி – 0094774672282
வாமகேசி – 0094243244269
பிரியதர்சனன் – (514) 7398795
வாகீசன் – (647) 4000582
நிருத்யா – (416) 2675296

periyanayaki 26th may 2014b

periyanayaki 26th may 2014a