முதலாம் ஆண்டு நினைவஞ்சலி..!!

அகில இலங்கை சமாதான நீதவானாக திகழ்ந்த வவுனியா உக்குளாங்குளத்தை சேர்ந்த அமரர் திரு. சந்தானம் ஞானபிரகாசம் அவர்களின் முதலாம் ஆண்டு நினைவஞ்சலி..!!

பிறப்பு -24.05.1937
இறப்பு – 23.05.2014

ஊர் போற்ற நல்ல உத்தமராய் வாழ்த்தவரே
எங்களுக்கு இன்றைக்கும் இனிப்பாய் இருந்தவரே
எப்போது தாத்தா -இனி உங்களைக் காண்போம்

பள்ளி காலத்தில் பக்குவம் சொல்லித் தந்தீர்
துள்ளி விளையாடு சுகத்தை கற்றுத் தந்தீர்
எள்ளி நகையாடுவோரை ஏறெடுத்து பார்க்காதீர் என்றீர்.
இளைஞர் கழகம் உருவாக்க அறிவுரையும் தந்தீரே.
ஏதும் அறியாத எம்மை எனையா விட்டிச் சென்றீர் ..!

கடல் தாண்டி வாழ்ந்தாலும் கண்ணீர் வருகிறது
உங்கள் உடல் விட்டுப் போனாலும் உள்ளம் வலிக்கிறது
விழி மீறி கண்ணீர் நிலத்தில் வீழ்கிறது
விழி மட்டும் தாத்தாவை தேடித் திரிகிறது

ஆத்மா சாந்தி பெற்று தாத்தா போய் வாங்கோ
அடிக்கடி எம் கனவில் ஆறுதல் சொல்லுங்கோ
கண் மூடி பணிகின்றோம்..
இறைவனிடம் சொல்லுகின்றோம்
அகில இலங்கை நீதவானாய் அங்கேயும் பணி செய்யுங்கோ

உம் ஆத்மா சாந்தியடைய எம் கண்ணீர் அஞ்சலிகளை காணிக்கையாக்கி பிரார்த்திக்கின்றோம்.
ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!

தகவல் Mohan Family -Vavuniya.

10402868_238877849642863_7353804401661077370_n