விழிநீர் அஞ்சலிகள்…!!
யாழ். புலோலி, பருத்தித்துறையை பிறப்பிடமாகவும், வவுனியாவை வாழ்விடமாகவும், பிரான்ஸை தற்காலிக வதிவிடமாகவும் கொண்ட திரு. சூசைதாசன் எட்வேட் வில்சன் அவர்கள் 25.03.2015 புதன்கிழமை பிரான்ஸில் மரணமெய்தினார் என்பதை மிகுந்த துயருடன் அறியத் தருகின்றோம்.

அன்னார் தவச்செல்வியின் அன்புக் கணவரும், கார்மேகவர்ணன், சுவேதனா, துவாரகன் ஆகியோரின் அன்புத் தந்தையுமாவார்.

முன்னர் ஈழ விடுதலைப் போராட்டத்துடன் தொடர்புகளை பேணிவந்த இவர் அண்மைக்காலங்களாக பிரான்ஸ் நாட்டில் எமது அமைப்பின் செயற்பாட்டாளராக இயங்கி வந்தார்.

இருதய நோயினால் பாதிக்கப்பட்டிருந்த எட்வேட் வில்சன் அவர்கள் நேற்று முன்தினம் (25.03.2015) புதன்கிழமை மரணமெய்தியுள்ளார்,

அன்னாரின் பிரிவால் துயருற்றிருக்கும் குடும்பத்தினர், உறவினர் மற்றும் நண்பர்களோடு புளொட் அமைப்பினராகிய நாமும் இப்பெருந்துயரினை பகிர்ந்துகொண்டு, எமது அஞ்சலியைச் சமர்ப்பிக்கின்றோம்.

பிரான்ஸ் நாட்டில், மேலதிக விபரங்களுக்கு தொடர்பு:
ஜோன்சன்- 0652388554, சுகுமார் -0751179646, சார்லி ரவி -0605811153

frames-design1a