15வது நினைவுதினம் திரு.சரவணபவானந்தன் சண்முகநாதன் (தோழர் வசந்தன்) சண்முகநாதன் வற்சலன்…

காலம் என்ற காலச்சுவட்டில்
எம் நினைவுத்தடங்கள் பல
ஆழப்புதையுண்டு அழிந்தாலும் ,

இந்தமாதமும் இந்த நாளும்
எம் மனதின் ஓரத்தில்
ஆழமாய்க்கீறி
ஆறாவடுவாய் போனது…..

வன்னி கண்ட கனவில்
வசந்தனாக வந்தவனே
வன்னி மண் ஈன்றெடுத்த மண்ணின் மைந்தனே
உன்னை நாம் எப்படி மறப்போம் ????????

ஊனை உருக்கி
தமிழன் மானம் காத்தவனே
கந்தகநெடியில் கடுகியே கரைந்தாயே !!!!!!!
உன்னையும் இந்த மாதத்தையும் (ஜூலை -15)
நாம் எப்படி மறப்போம் ????????

திரு . சரவணபவானந்தன் சண்முகநாதன் என்கிற சொந்தப் பெயரை உடைய தோழர் வசந்தன் மற்றும் அவரது புதல்வன் சண்முகநாதன் வற்சலன் இருவரும் பாசிசத்தினால் காவு கொள்ளப்பட்ட நாள்
(1998) ஜூலை 15 ஆம் திகதி

இலங்கையிலுள்ள ஒடுக்கப்பட்ட, உரிமை மறுக்கப்பட்ட ஏழை மக்களின் இயல்பு வாழ்க்கை குறித்த நாளாந்த பிரச்சினைக்கான தீர்வு தொடக்கம் தமிழ் பேசும் மக்களின் அரசியல் அபிலாசைகளுக்கான இறுதித்தீர்வு வரை அதிக அக்கறையோடு செயலாற்றியிருந்த நிறைவான நீண்ட அரசியல் வரலாறு கொண்டவர்.

அவரது மறைவு குறிப்பாக வன்னி மக்களுக்கு பேரிழப்பாகும்

தகவல்.. வவுனியா கோவில்குளம் இளைஞர்கள்.

– See more at: http://www.athirady.com/tamil-news/infomation/253310.html#sthash.vQtBp8jU.dpuf