திரு நாகநாதி தர்மலிங்கம்
பிறப்பு : 16 யூலை 1946 — இறப்பு : 3 நவம்பர் 2015

புங்கை நகர் தந்த தர்மரே..,
புகழோடு தோன்றிய வெண்ணிலவே..
வந்தோரை வரவேற்கும் உன் பணி,
வரையறை செய்யப்பட்டதா?… நம்ப முடியவில்லை..

வெற்றி கிடைக்கும் வரை விடாமுயற்சி செய்பவரே…
பல வெற்றிகள் கண்டவரே…
மடத்துவெளி முருகன் அழைத்தானோ உன்னை…

பழகுவதற்கு இனிமையானவரே….
பார்ப்பதற்கு பண்பாணவரே….
எனது சுவிஸ் அத்தாரே,..
இனி உங்களைக் காணமுடியாது
என்ற மனக் கவலையில்,
கண்களில் கண்ணீர் மழைத்துளி…

சொந்தத்துக்குள் சுகம் விசாரிப்பு இனி இல்லையா?..
மண் விட்டு வந்த பின் அத்தார் இருக்கிறார்..
என்ற நம்பிக்கை, இப்போ தகர்ந்தது ஏன்?..

அஞ்சலி செய்ய எனக்கு அழுகை வருகிறது ..
போய் வா என் தருமரே… அங்கும் உங்களுக்கு..
மடத்துவெளி முருகன் நிம்மதி தருவார்..!
இறுதி வணக்கம் என் அத்தாருக்கு..
விழிநீர் கண்ணீர் அஞ்சலிகளுடன்…!!

-மைத்துனன் கைலாசநாதன் (குழந்தை) குடும்பம்-

unnamed