திரு விஸ்வலிங்கம் பொன்னுத்துரை (குமரன்)
அன்னை மடியில் : 14 ஏப்ரல் 1954 — ஆண்டவன் அடியில் : 18 யூலை 2013
யாழ். மாதகல் வில்வளையைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் Paris சை வதிவிடமாகவும் கொண்ட விஸ்வலிங்கம் பொன்னுத்துரை அவர்கள் 18-07-2013 வியாழக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான விஸ்வலிங்கம் தெய்வானை தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான அம்பலவாணர் இராசம்மா தம்பதிகளின் மருமகனும்,

இரத்தினேஸ்வரி அவர்களின் அன்புக் கணவரும்,

விக்ரர், வினோத், விதுஷா ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

சங்கரப்பிள்ளை, காலஞ்சென்ற செல்லத்துரை, சின்னத்துரை ஆகியோரின் அருமைச் சகோதரனும்,

சுந்தரலிங்கம், கணேசலிங்கம், புவனேஸ்வரி, கற்பகம், காலஞ்சென்ற சின்னத்தங்கம், நாகரத்தினம் ஆகியோரின் மைத்துனரும்,

பரமேஸ்வரி, வில்வராணி, தியாகராசா ஆகியோரின் சகலனும்,

காலஞ்சென்ற றஞ்சி, ரவி, இரத்தினேஸ், இராசகுமாரி, உதயம், கடம்பம், காலஞ்சென்ற பத்மவேலரசன், பிரியா, துஸ்யந்தன், இளங்கோ, மதுரா, செந்தூரன் ஆகியோரின் சிற்றப்பாவும்,

வதனா, சுரேஸ், அச்சுதன், முகுந்தன், வாசுகி, சிந்து, நிரோஜன், ஜனனி ஆகியோரின் மாமனாரும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்
குடும்பத்தினர்
நிகழ்வுகள்
பார்வைக்கு
திகதி: வெள்ளிக்கிழமை 19/07/2013, 04:00 பி.ப — 05:00 பி.ப
முகவரி: 7 Boulevard de Ménilmontant, 75011 Paris, France ‎(Metro: Phillipe Auguste)
பார்வைக்கு
திகதி: சனிக்கிழமை 20/07/2013, 04:00 பி.ப — 05:00 பி.ப
முகவரி: 7 Boulevard de Ménilmontant, 75011 Paris, France ‎(Metro: Phillipe Auguste)
பார்வைக்கு
திகதி: ஞாயிற்றுக்கிழமை 21/07/2013, 04:00 பி.ப — 05:00 பி.ப
முகவரி: 7 Boulevard de Ménilmontant, 75011 Paris, France ‎‎(Metro: Phillipe Auguste)
பார்வைக்கு
திகதி: திங்கட்கிழமை 22/07/2013, 04:00 பி.ப — 05:00 பி.ப
முகவரி: 7 Boulevard de Ménilmontant, 75011 Paris, France ‎‎(Metro: Phillipe Auguste)
கிரியை
திகதி: செவ்வாய்க்கிழமை 23/07/2013, 08:30 மு.ப — 09:45 மு.ப
முகவரி: 7 Boulevard de Ménilmontant, 75011 Paris, France ‎‎(Metro: Phillipe Auguste)
தகனம்
திகதி: செவ்வாய்க்கிழமை 23/07/2013, 09:45 மு.ப
முகவரி: 71 Rue des Rondeaux, 75020 Paris, France(metro: Cambetta)
தொடர்புகளுக்கு
விக்ரர்(மகன்) — பிரான்ஸ்
செல்லிடப்பேசி: +33601486574
வீடு — பிரான்ஸ்
தொலைபேசி: +33146361911
வினோத்(மகன்) — பிரான்ஸ்
செல்லிடப்பேசி: +33665648261

***** காந்தியம் அமைப்பின் செயற்பாட்டாளரும், புளொட் அமைப்பின் ஆரம்பகால உறுப்பினருமான குமரன் என்று அழைக்கப்படும் விஸ்வலிங்கம் பொன்னுத்துரை அவர்கள் பிரான்சில் காலமானார்.

கடந்த ஓராண்டு காலமாக சுவாசக் கோளாறு காரணமாக சிகிச்சை எடுத்துவந்த இவர் யூலை 13, 2013 இல் பிரான்ஸ் சென் லூயி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்தார்.

இடதுசாரி செயற்பாட்டாளரும், காந்தியம் அமைப்பின் செயற்பாட்டாளராகவும் அரசியல் பயணத்தை ஆரம்பித்த இவர் காந்தியம் அமைப்பின் யாழ் மாவட்ட பொறுப்பாளராக இருந்தவர். பின்னர் தமிழீழ மக்கள் விடுதலைக் கழகம் – (PLOTE) அமைப்பில் தன்னை இணைத்துக் கொண்டார்.

தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் ஆரம்பகால உறுப்பினரும் மத்திய குழு உறுப்பினருமான இவர் குமரன் என கழகத் தோழர்களால் அறியப்பட்டு இருந்தார்.

தமிழீமிழ மக்கள் விடுதலைக் கழகம் ஆயிரம் ஆயிரமாக உறுப்பினர்களை உள்வாங்கிய அக்காலப் பகுதியில் தளநிர்வாகப் பொறுப்பும் குமரனிடம் வழங்கப்பட்டு இருந்தது.

யாழ் மாதகல் பகுதியைச் சேர்ந்த இவர் தளத்தில் இருந்து பின் தளமான இந்தியாவுக்கு உறுப்பினர்களை அனுப்புவதற்கும் பொறுப்பாக இருந்தவர். அதனால் ஓட்டி குமரன் என்றும் அறியப்பட்டவர்.
(தகவல்… அலெக்ஸ் இரவி)

– See more at: http://www.athirady.com/tamil-news/infomation/254254.html#sthash.r19F0QrH.dpuf