திரு. வேலாயுதப்பிள்ளை ஜெயபாலன் (ஜெயம்) -மரண அறிவித்தல்-

மலர்வு 1956.02.06 உதிர்வு 09.10.2016

யாழ். கொக்குவிலைப் பிறப்பிடமாகவும், லண்டன் ஈஸ்த்ஹாம் நகரை வாழ்விடமாகவும் கொண்ட திரு. வேலாயுதப்பிள்ளை ஜெயபாலன் (ஜெயம்) அவர்கள் இன்று (09.10.2016) ஞாயிற்றுக்கிழமை லண்டனில் மரணமெய்தினார் என்பதை தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தினராகிய நாம் மிகுந்த துயருடன் அறியத் தருகின்றோம்.

1980களின் ஆரம்பங்களில் இருந்தே கழகத்தின் லண்டன் கிளை உறுப்பினராக செயலாற்றிய அவர், பின் லண்டன் கிளையின் அமைப்பாளராக இருந்தார். அண்மையில் நடைபெற்ற கழக மாநாட்டில் அவர் கழகத்தின் செயற்குழு அங்கத்தவராக தெரிவு செய்யப்பட்டிருந்தார்.

தமிழ் மக்களின் விடிவிற்காக மிகவும் ஆர்வமாகவும், மிகக் கடுமையாகவும் உழைத்த அவர், யுத்தத்திற்கு பின்னரும்கூட தமிழ் மக்களின் வாழ்வாதாரத்தை மீளக் கட்டியெழுப்புவதில் மிகுந்த ஆர்வத்தோடும், அர்ப்பணிப்போடும் செயற்பட்டு வந்தார்.

அன்னாரின் பிரிவால் துயருற்றிருக்கும் குடும்பத்தினர், உறவினர் மற்றும் நண்பர்களோடு “புளொட்” அமைப்பினராகிய நாமும் இப்பெருந்துயரினை பகிர்ந்து கொள்வதோடு அன்னாருக்கு எமது அஞ்சலிகளை காணிக்கையாக்குகின்றோம்.

தமிழீழ மக்கள் விடுதலைக் கழகம் (PLOTE)
ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணி (DPLF)

frames-design1ae