நீ மண்ணை விட்டேகி 14 ஆண்டுகள்! இன்று நீயில்லை… நாம் உணருகிறோம்…
தோழா! நீ மண்ணை விட்டேகி பதினான்கு ஆண்டுகள்! (02/09/2013)
இன்றைய வவுனியா நகரத்தை மானிடர் வாழும் நகரமாக மாற்றினாயே!
இலங்கையிலேயே முதன்மை நகரமாக கொண்டுவர பக்கபலமாக இருந்தாயே!
இன்று நீயில்லை…
நாம் உணருகிறோம்… உரிமைகளை இழக்கிறோம்…

பின்தளத்திலே உன்னிடம் வந்தோரை காப்பற்றினாயே!
எதிலிகளிற்கு உடை, உணவு சேர்த்த மாணவருக்கு பாரஊர்தி எடுத்து வந்தாயே!
உன் நாட்டிற்காக பயிற்சி தந்த நாட்டவரிடம் வீர காவியம் படைத்தது வீர மறவனாயே!
இன்று நீயில்லை…
நாம் உணருகிறோம்… உரிமைகளை இழக்கிறோம்…

எம்மூவர் பாராளுமன்றம் செல்ல வழியமைத்து பக்கபலமாக இருந்தாயே!
இன்றும் வவுனியாவில் எம்மினம் நிமிர்ந்து நிற்க அத்திவாரம் போட்டாயே!
இன்றும் வவுனியாவில் எம்மினம் பாதுகாப்போடு வாழ அத்திவாரம் போட்டாயே!
இன்று நீயில்லை…
நாம் உணருகிறோம்… உரிமைகளை இழக்கிறோம்…!

எதிரிகளுக்கும் துரோகிகளுக்கும் சிம்ம சொப்பனமாக இருந்தாயே!
உன்னிடம் வந்தோரை உன் சிறகுக்குள் வைத்து காப்பாற்றினாயே!
இடம்பெயர்ந்தோரை இடம் அமைத்து இடம் அமற இடம் அமைத்து கொடுத்தாயே!
இன்று நீயில்லை…
நாம் உணருகிறோம்… உரிமைகளை இழக்கிறோம்…!

அகதிகள் என்ற பெயரை அழித்து அவர்களின் நிலையை மாற்றினாயே!
எல்லைப்புறங்களில் அவர்களை குடியேற்றி அவர்களின் நிலையை மாற்றினாயே!
எல்லைபுறங்களை செழுமையடைய செய்து எமது எல்லைகளை காப்பாற்றினாயே!
இன்று நீயில்லை…
நாம் உணருகிறோம்… உரிமைகளை இழக்கிறோம்…!

இன்று நீயில்லை… பாராளுமன்ற பிரதிநிதித்துவம் இல்லை!
இன்று நீயில்லை… திறம்பட நகராட்சியை நடாத்த தலைமை இல்லை!
இன்று நீயில்லை… எம்மினத்திற்கு முறையிட… காவல் காக்க காவலாளி இல்லை!
இன்று நீயில்லை…
நாம் உணருகிறோம்… உரிமைகளை இழக்கிறோம்…!

நிலங்கீழ் மாணிக்கத்தின் மறு உருவமே இன்று நீயில்லை
நாம் உணருகிறோம்… உரிமைகளை இழக்கிறோம்…!

மானிடர்களுள் மானிடனாய் வாழ்ந்த மாணிக்கமே இன்று நீயில்லை
நாம் உணருகிறோம்… உரிமைகளை இழக்கிறோம்…!

கண்ணாடியின் விம்பமாய் கண்ணாடியாய் வாழ்ந்தாயே இன்று நீயில்லை
நாம் உணருகிறோம்… உரிமைகளை இழக்கிறோம்…!

கோழைத்தனமாய்… கோழியாக கொன்றார்களே இன்று நீயில்லை
நாம் உணருகிறோம்… உரிமைகளை இழக்கிறோம்…!

துரோகியாக்கி துரோகத்தனமாக கொன்றார்களே இன்று நீயில்லை
நாம் உணருகிறோம்… உரிமைகளை இழக்கிறோம்…!

எம்துயரங்கள் ஓயவில்லை… எம் வாழ்வு மீளவில்லை… இன்று நீயில்லை
நாம் உணருகிறோம்… உரிமைகளை இழக்கிறோம்

நினைவு கூர்வோம்… உன் திதியில் நினைவு கூர்வோம்… இன்று நீயில்லை
நாம் உணருகிறோம்… உரிமைகளை இழக்கிறோம்..!!!

–தகவல்… “கோபி மோகன்” -அமெரிக்கா

– See more at: http://www.athirady.com/tamil-news/infomation/263390.html#sthash.5MyMGc7u.dpuf