*தோழர் ரவீந்திரகுமார்*

*19வது ஆண்டு நினைவாஞ்சலி* ( 31/12/1997)

எம் பாசத்திற்குரிய தோழன் ரவி! தமிழீழ மக்கள் விடுதலைக் கழகம் எனும் பாசறையில் எம்முடன் ஆரம்பித்து பிரித்தானியாவில் தமிழீழ தகவல் நடுவம் எனும் தொலைபேசி செய்தி பரிவர்த்தனை வரை எம்முடன் பயணித்த எமது பாசமிகு தோழன் புஸ்பாகரன் ரவீந்திரகுமார் (ரவி) அவர்களின் நினைவாக அவரை மீண்டும் நினைவு மீட்கின்றோம்.

திருமலையில் பிறந்து அங்கே கல்வி கற்றுவந்த நிலையில், சிங்கள ஆக்கிரமிப்பு படைகளின் அச்சுறுத்தல்களால் அங்கிருந்து இடம்பெயர வேண்டிய சூழ்நிலையில், தாம் பிறந்த வளர்ந்த மண்ணையும், கல்வி கற்று வந்த பள்ளியையும் விட்டு யாழ் மண்ணிற்கு இடம்பெயர்ந்து யாழ் ஊரெழுவில் வசித்து வந்தார்.

பள்ளி மாணவனாக இருந்துவந்த ரவி அவர்கள் தமிழீழ மக்கள் விடுதலை கழகத்தின் பயிற்சி பாசறையில் அவரது அண்ணன் இருந்து வந்த நிலையில், பல்வேறு விடுதலை அமைப்புகள் தோற்றம் பெற்றிருந்தாலும் தானும் தடம்புரலாமல் தனது சகோதரனின் பாதையில் தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்துடன் இணைந்து செயலாற்றிய செயல் வீரன்.

காலப்போக்கில் விடுதலை போராட்டம் தடுமாறி சகோத விடுதலை இயக்கங்களிற்கிடையிலான மோதலாக உருவாக்கம்பெற்ற போது தோழர் ரவி அவர்களும் தாய் மண்ணைவிட்டு இடம்பெயர வேண்டிய சூழ் நிலை தோன்றிய போது தான் ரவி அவர்களும் பிரித்தானிய மண்ணிற்கு இடம்பெயர வேண்டிய நிலை தோன்றியது.

பிரித்தானியாவிற்கு இடம்பெயர்ந்த போதும், தனது தாயக விடுதலைக்கான பணியை அங்கிருந்தும் பின் தொடர்ந்தவர்தான் எம் தோழன் ரவி.

பிரித்தானியாவின் ஈஸ்த்காம் நகரில் இயங்கி வந்த தமிழீழ மக்கள் விடுதலை கழகத்தின் அலுவலகத்தில் செயலாற்றி இருந்து இயங்கி வந்த தமிழீழ தகவல் நடுவம் எனும் செய்தி பரிவர்த்தனை நிலையத்துடன் தன்னையும் இணைத்துக் கொண்டு செயலாற்றி வந்தார்.

மிகவும் இளம் வயதில் கொடிய நோயுற்ற போதும் கழகத்தின்பால் தான் கொண்ட மட்டற்ற பற்றினை வெளிப்படுத்தியே வந்தான்.

இந்த உன்னத தோழனுக்கு எம் கண்ணீர் அஞ்சலிகள்..

*அனைத்து அடக்குமுறைகளையும் உடைத்தெறிவோம்*