மேதகு வேலுப்பிள்ளை பிரபாகரனின் 4ம் ஆண்டு நினைவஞ்சலி
நம் வல்வெட்டித்துறை மண்ணில்
விளைந்தெழுந்த மாவீரனே..
அண்ணணாய், தம்பியாய், தளபதியாய்,
தலைவனாய், அனைத்துமாய்
நம்மோடு வாழ்ந்திட்ட மேதகு பிரபாகரனே..

நீ எம்மை விட்டு பிரிந்து ஆண்டுகள்
நான்கு நகர்ந்து விட்டனவா..?
நம்ப முடியவில்லையே தலைவா…!
நம்ப முடியவில்லையே தலைவா…!

நீ எம்முடன் இருக்கின்றாய் என்றல்லவா
நாம் இன்னும் எண்ணிக் கொண்டிருக்கிறோம்..

நான்கு சகாப்த காலங்கள் நம்மினத்துக்குள்
நட்சத்திரமாய் மின்னிக் கொண்டிருந்த நாயகனே..

உன் ஒளிபட்டு உயிர்த்தெழுந்த
உலகத்தமிழன், உவகை கொண்டிருந்தானே..

வீறுகொண்டெழ வைத்தாய் நம் தமிழினத்தை..
வெற்றி வாகை பல சூடித் தந்தாய் …
வீழ்வோமென்று நினைத்தோமா..?

முப்படைகளுடன் எம்முன்னோர்களின்
சரித்திரத்தை முன்னோக்கி நகர்த்தியவனே..

உன் பலம் கண்டு உயிர் பயம்
கொண்டோடிய எதிரிகள்
எம்மினத்தை கண்டு ஏளனம் கொண்டு
நகைக்கின்றார்கள்.. நீ எங்கே போனாய்..?

சிங்களத்தை சின்னாபின்னமாக
சிதறடித்து சினம்கொள்ள வைத்தவனே..
எக்காளமிட்டு சிரிக்கிறான்.. இன்று…
எக்காலத்திலும் எமக்கு விடிவில்லை என்கின்றான்..

மீண்டும் நீ பிறந்து வராயோ…
தமிழர் படைதனை, தலமை தாங்கிட நீ வந்தால்…

சிங்களத்தை சின்னபின்னமாக்கி
சிதறடித்து மீண்டும் மீண்டெழுவோம்..
மீட்டிடுவோம் நம்மினத்தையும்… நம் நிலத்தையும்..

நம்மினத்தின் வரலாற்றை மாற்றி,
வெற்றி வாகைகள் பல சூடித்தந்த மாவீரனே..
நம்மை விட்டு நீ எங்கே வெகு தூரம் சென்றாய்..
நாடில்லாமல் நாடோடிகளாய்,
நடைபிணங்களாய் போனோமே…

நம்பியிருந்தோமே உன்னை மட்டுமே நம்பியிருந்தோமே..
நம் நாட்டை மீட்டுத் தருவாயென நம்பியிருந்தோமே..

நாதியாய் நடுத்தெருவில் இப்படி நம்மையெல்லாம
தன்னம் தனியே தவிக்க விட்டு விட்டு
நீ மட்டும் எங்கே சென்றாய்?

நீ நலமாயிருக்கின்றாய்
நாளை வருவாய்.. நாளை வருவாய்
எனச் சொல்லிச் சொல்லி……
எம்மை ஏமாற்றியவர் எத்தனை பேரோ..

நம்பினோமே.. நம்பினோம்…
நயவஞ்சகர் கூட்டத்தின் பேச்சை நம்பினோம்..

நம்முடன் நீயில்லை என்பதை
நான்காண்டுகள் கழிந்த பின்னும்
நம் நெஞ்சம் இன்னும்
நம்ப மறுக்குதில்லையே தலைவா..

உன் பெயரை வைத்து பிழைப்பவர்கள்
நீ உயிரோடு இன்னும் இருக்கின்றாய் என்கிறார்..
உன்னை நம்பிய நாம்…
யாரை நம்புவோமோ இவ்வலகத்தில்….

ஈடு இணையற்ற எம் தலைவா
எத்தனை ஆண்டுகள் கழிந்தாலும்
எம் இதயங்களில் நீ என்றென்றும் இருப்பாய்..

நான்கு ஆண்டுகள் மட்டுமல்ல
நான்காயிரம் ஆண்டுகள் ஆனாலும்
நம்மினம் உன் நாமம் தனை மறவாது…

-வல்வெட்டித்துறை மக்கள் –
(மின்னஞ்சல் மூலம் கிடைக்கப் பெற்றது)

– See more at: http://www.athirady.com/tamil-news/infomation/242580.html#sthash.W7TqCfWf.dpuf