மரண அறிவித்தல்

(மலர்வு 28.11.1976 – உதிர்வு – 02.05.2016.

குருநாகலைப் பிறப்பிடமாகவும், வவுனியா சிதம்பரபுரத்தை வாழ்விடமாகவும் கொண்ட எமது அமைப்பின் முன்னாள் உறுப்பினர் ராசலிங்கம் மகேஸ்வரன் அவர்கள் (02.05.2016) திங்கட்கிழமை அகால மரணமானார்.

துணிவும், நேர்மையும், துடிப்பும் மிக்க இவர், தனது அன்பாலும் தொண்டுகளாலும் மக்களின் மனதில் இடம்பிடித்தவர். சமூக மேம்பாட்டில் அதீத அக்கறை கொண்டு தன்னை அர்ப்பணித்துச் செயற்பட்டவர்.

அன்னாரது இழப்பினை தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தினராகிய நாம் சொல்லொணாத் துயர் சுமந்து ஆறாத் துயரோடு, அஞ்சலித்து எம்தேசத்து நேச நெஞ்சங்களுக்கும் அறியத்தருகின்றோம்.

தமிழீழ மக்கள் விடுதலைக் கழகம் (PLOTE)
ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணி (DPLF)

குறிப்பு – அன்னாரின் பூதவுடல் வவுனியா சிதம்பரபுரத்தில் அமைந்துள்ள அவரது இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு, வியாழக்கிழமை பிற்பகல் இறுதிக் கிரியைகள் இடம்பெறவுள்ளது. தொடர்புகட்கு : (0775157375 – சகோதரி)

frames-design1v