மரண அறிவித்தல்

சுழிபுரம் கிழக்கைப் பிறப்பிடமாகவும், வெள்ளவத்தையை வதிவிடமாகவும் கொண்ட பிரபல வர்த்தகர் திரு. விஸ்வலிங்கம் உலகநாதன் அவர்கள் 04.03.2015 புதன்கிழமை சிவபதமடைந்தார்.

அன்னார் விஸ்வலிங்கம் (பெத்தப்பா-பிரபல வர்த்தகர், வெள்ளவத்தை) கதிராசிப்பிள்ளை அவர்களின் சிரேஷ்ட புதல்வரும், செல்லத்துரை அன்னம் அவர்களின் மருமகனும், பரமேஸ்வரி(அடைக்கலம்) அவர்களின் அன்புக் கணவரும் ஆவார்.

அன்னார் ஜெகசோதி(ஜெகன்), நந்தசுதன்(சுதன்), சசிதரன்(சசி) ஆகியோரின் அன்புத் தந்தையும், ரஜனியின் அன்பு மாமானாரும் ஆவார்.

அன்னார் மனோன்மணி, சராநாதன்(பிரபல வர்த்தகர்), ஞானசொரூபமணி, கைலைநாதன்(செல்வம்-பிரான்ஸ்), தேவலோகமணி, பரஞ்சோதிநாதன்(கனடா), சோதிமணி, சோதிநாதன்(பிரபல வர்த்தகர்) அமரர் ராஜேஸ்வரி, அமரர் ஜெகசோதிநாதன், சபாநாதன் ஆகியோரின் அன்புச் சகோதரருமாவார்.

சுப்பிரமணியம்(சிவலிங்கம்-ஓய்வுபெற்ற புகையிரதநிலைய மேலதிகாரி), புவனராணி, எதிர்வீரசிங்கம்( ஓய்வுபெற்ற பொறியியலாளர்), சாந்தினி(பிரான்ஸ்), அமரர் இந்திரசேனன்(ஓய்வுபெற்ற பொறியியலாளர்), அனந்தி(கனடா), சோமாஸ்கந்தா(கணக்காளர்) ஆகியோரின் பிரியம்மிகு மைத்துனருமாவார்.

சூரியகுமார்(கனடா), பூங்கோதை(லண்டன்), கிருஷ்ணவேணி, ஜெயக்குமார்(பிரான்ஸ்), முரளீதரன்(லண்டன்), விஜிதா(லண்டன்), ஜெயபரன்(வெலன்;ஸியா), தேனுகரன், கௌரீஸ்வரி, டிஷானி ஆகியோரின் பாசமிகு மாமனாருமாவார்.

அன்னார் அமரர் பொன்னம்பலம், அமரர் தனபூமாதேவி, கனகதேவி(தங்கம், கனடா), செல்வலட்சுமி(ராசாத்தி) ஆகியோரின் பெறாமகனுமாவார். அன்னமுத்து, சோதிமுத்து, அமரர் சிவராசா(களஞ்சிய பொறுப்பாளர் ப.நோ.கூ.சங்கம்-வவுனியா), தவகுணராஜசிங்கம்(டுடுடீ கொழும்பு, பேராதனை பல்கலைக் கழக விரிவுரையாளர்) ஆகியோரின் மருமகனுமாவார்.

சியாமளா, விஸ்வலிங்கம், தவரூபன், பூஜா(பிரான்ஸ்), சுஹானா(பிரான்ஸ்), ரதனி(கனடா), கிஷோத்(கனடா) ஆகியோரின் பெரியப்பாவுமாவார்.

அன்னாரின் பூதவுடல் கல்கிஸ்சை மகிந்த மலர்ச்சாலையில் வியாழக்கிழமை (05.03.2015) முதல் சனிக்கிழமை (07.03.2015) பிற்பகல் 12மணிவரையில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு பிற்பகல் 2.00 மணிக்கு கல்கிஸ்சை பொது மயானத்தில் தகனம் செய்யப்படும், இவ்வறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமறு அன்புடன் வேண்டுகின்றோம்.

தகவல்-
மனைவி, பிள்ளைகள்.
அடைக்கலம் -0112361670, ஜெகன் -0755849541 சுதன் -0757423570, சசி 075-2565387

maranaari