வீரத்தமிழ்மகன் முத்துக்குமார்
வீரவணக்க நாள்
29.01.2013 செவ்வாய்க்கிழமை காலை 9 மணி
கொளத்தூர், சென்னை
தன்னுடைய ஈடுஇணையற்ற உயிர்க்கொடையாலும் அளவிட இயலாத அறிவாற்றலாலும்
தமிழினத்தைத் தலைநிமிரச் செய்த
மாவீரன் முத்துக்குமாரின் நான்காவது நினைவுநாள் – 29.01.2013.
அவருக்கு வீரவணக்கம் செலுத்த, கொளத்தூரில் அவரது உடலுக்கு மக்கள் அஞ்சலி செலுத்திய அன்னை சத்யா நகர் 60 அடி சாலையில்,
29.01.2013 காலை 9 மணிக்கு,
தமிழின நலனில் அக்கறைகொண்ட அனைவரும் திரள்கிறோம்.
ஈழச் சொந்தங்களுக்காக உயிர்துறந்த அனைத்து மாவீரர்களின் நினைவையும் போற்றும் விதத்தில் 22 அடி உயர மலர்த்தூண் அந்த இடத்தில் அமைக்கப்படுகிறது.
முத்துக்குமாரின் தங்கை திருமதி. தமிழரசி முதல்மலர் தூவி வீரவணக்க நிகழ்வைத் தொடங்கி வைக்கிறார்.
மாவீரர்களுக்கு மலர் வணக்கம் செலுத்த அலைகடலென அணிதிரள்வோம்!
வீரத்தமிழ்மகன் முத்துக்குமார் வீரவணக்க நிகழ்வுக் குழு
பேச… 9 8 4 1 9 0 6 2 9 0
***********************

வீரத்தமிழ்மகன் முத்துக்குமார் வீரவணக்க நிகழ்வுக் குழு
சென்னை – 600106
பேச: 9841906290

பெருமதிப்புக்குரிய செய்தியாளர்களுக்கு, வணக்கம்.
வீரத்தமிழ்மகன் முத்துக்குமார் நான்காம் ஆண்டு வீரவணக்க நாள் நிகழ்வு ஜனவரி 29ம் தேதி (29.1.13) காலை 9 மணிக்கு சென்னை கொளத்தூரில் நடைபெறவுள்ளது. ஈழத்தமிழ் உறவுகளைக் காக்கத் தங்கள் இன்னுயிரை ஈந்த வீரத்தியாகிகளின் குடும்பத்தினர் மட்டுமின்றி தமிழின நலனில் அக்கறை கொண்ட அனைத்து அமைப்புகளும் இயக்கங்களும் நிகழ்வில் பங்கேற்று மலர் வணக்கம் செலுத்த உள்ளனர்.

இந்த நிகழ்வுக்கு அனுமதி கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடுக்கப்பட்ட வழக்கைத் தொடர்ந்து, நிகழ்ச்சிக்கு அனுமதியும் பாதுகாப்பும் வழங்க, இன்று (23.1.13) காவல்துறை முன்வந்திருப்பது குறிப்பிடத்தக்கது.

நிகழ்ச்சி தொடர்பான செய்தி அனைத்துத் தரப்பினரிடமும் போய்ச் சேர. நீங்கள் ஒவ்வொருவரும் உறுதுணையாய் இருக்கவேண்டும் என்று அன்புடன் கோருகிறோம்.

நன்றி!
என்றும் அன்புடன்,
புகழேந்தி தங்கராஜ்
23.01.2013
(வீர வணக்க நிகழ்வுக் குழுவுக்காக)

– See more at: http://www.athirady.com/tamil-news/infomation/221449.html#sthash.EUyeO8ys.dpuf