வேலுப்பிள்ளை வீரபத்திரன்..!

மலேசியாவைப் பிறப்பிடமாகவும், வட்டுக்கோட்டையை வசிப்பிடமாகவும் கொண்ட வேலுப்பிள்ளை வீரபத்திரன் நேற்றுமுன்தினம் (08.04.2014) செவ்வாய்க்கிழமை காலமானார்.

அன்னார் காலஞ்சென்றவர்களான வேலுப்பிள்ளை சிவகாமிப்பிள்ளை தம்பதியரின் புதல்வனும், சந்தானலட்சுமியின் அன்புக் கணவரும், காலஞ்சென்றவர்களான கந்தையா பாக்கியம் தம்பதியரின் அன்பு மருமகனும், சுகந்தினியின் (Swiss) பாசமிகு தந்தையும், சசிந்தரனின் (Swiss) பாசமிகு மாமனும், லேணுசாந்தின் (Swiss) பாசமிகு பேரனும், கண்ணபிரானின் அன்புச் சகோதரனும், காலஞ்சென்ற மகேஸ்வரன் மற்றும் குமாரசிங்கம், தர்மலிங்கம் காலம் சென்ற நவமணி ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார். மணிவண்ணன், நிர்மலா, கமலவண்ணன் ஆகியோரின் அன்புச் சித்தப்பாவும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியைகள் இன்று (10.04.2014) வியாழக்கிழமை அவரது இல்லத்தில் காலை 7 மணியளவில் நடைபெற்று, பூதவுடல் இறுதிக்கிரியைக்காக வழுக்கையாறு இந்து மயானத்துக்கு எடுத்துச்செல்லப்படும். இந்த அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.

தகவல் :
வீ.சந்தானலட்சுமி (மனைவி)
& மருமகன் சசிந்திரன்

தொடர்புகளுக்கு
வீ.சந்தானலட்சுமி (மனைவி) – பங்குருவீதி, வட்டுக்கோட்டை. ,
மருமகன் சசிந்திரன் (SWISS) 0041/442711969 And 0041/792456939