கேணல் பரிதி அவர்களின் இரண்டாம் ஆண்டு வீர வணக்க நாள் இன்றாகும்.

தமிழீழ விடுதலைப் புலிகளின் மூத்த தளபதிகளில் ஒருவரும், பிரான்ஸ் தமிழர் ஒருங்கிணைப்புக் குழு பொறுப்பாளருமான பரிதி அவர்கள் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி வீரச்சாவைத் தழுவிக் கொண்டார்.

நடராஜா மதீந்தரன் என்ற இயற்பெயரைக் கொண்ட தளபதி பரிதி 1983 ஆம் ஆண்டு தன்னை தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் இணைத்துக் கொண்டார். இந்தியாவில் தமிழீழ விடுதலைப் புலிகளின் இரண்டாம் பாசறைப் பிரிவில் பயிற்சியை பெற்றுக் கொண்ட வீரத்தளபதிக்கு தலைமைபீடம் சூட்டிய பெயர் றீகன்.

தமிழீழ விடுதலைப் புலிகளின் மூத்த தளபதிகளான பிரிகேடியர் பானு, லெப் கேணல் குமரப்பா, ரஞ்சன் லாலா மற்றும் வாசு போன்றோருடன் இணைந்து போரியல் பயிற்சியை நிறைவு செய்த பின்னர் திரும்பினார் தளபதி கேணல் பரிதி.

தமிழீழம் திரும்பிய தளபதி கேணல் பரிதி மன்னார், யாழ்ப்பாணம், வன்னி என்று தமிழீழத்தின் முக்கியமான போர்முனைகளிலெல்லாம் வீரத்தோடும் விடுதலை வேட்கையோடும் களம்பல கண்டார். இவரது போரிடும் ஆற்றல் இவரை குறுகிய காலத்துக்குள்ளேயே மத்தியநிலை தளபதியாக உயர்த்தியது.

தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் புலம்பெயர் களம் ஏற்படுத்தக்கூடிய தாக்கத்தை உணர்ந்து 2003 ஆம் ஆண்டு முதல் பரிதி என்ற பெயருடன் பிரான்ஸ் நாட்டுக்கான அரசியல் மற்றும் நிதி சேகரிப்பு நடவடிக்கைகளுக்கான பொறுப்பாளராக தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைமைப் பீடத்தால் நியமிக்கப்பட்டார்.

அன்றிலிருந்து, புலம்பெயர் களத்திலும் ஒரு தளபதியாக, முழுநேர தேசியச் செயற்பாட்டாளனாக தமிழீழ விடுதலை என்ற உயரிய இலட்சியத்துக்காகப் பணியாற்றிய தளபதி கேணல் பரிதி அவர்கள், தனது இறுதி மூச்சு வரை அந்த இலட்சியத்துக்காகவே போராடி, அந்த இலட்சியப் பணியில் ஈடுபட்டிருந்த போதே கோழைத்தனமாகவும், கோரத்தனமான முறையிலும் படுகொலை செய்யப்பட்டுள்ளார்.

(EelamRanjan -London)

கேணல் பரிதி அண்ணா நினைவாக……

பரிதி என்ற காற்று…..

மண்ணில் உயிரை…