திரு.கிருஸ்ணபிள்ளை பிரபாகரன்

தோற்றம்: 11 மார்கழி – 1961 மறைவு: 08-தை-2016

புங்குடுதீவு 8ம் வட்டாரம் மடத்துவளியை பிறப்பிடமாகவும், யாழ்.கொழும்புத்துறையை வசிப்பிடமாகவும் கொண்ட திரு.கிருஸ்ணபிள்ளை பிரபாகரன் அவர்கள் 08-01-2016 வெள்ளக்கிழமை அன்று காலமானார்.

அண்ணா என்ற சொந்தம் நீ மட்டும்தான்….

அன்னை பூபதியின் மடியில் பிறந்து
அண்ணனாய் தம்பியாய் உயிருக்குயிராய்
உவகை கொண்ட வாழ்வுதனில்
ஒன்றாய் வளர்ந்தோமே!

பஞ்சபாண்டவர்கள் நாம்
பயமறியா நெஞ்சம்கொண்டவர்களாய்
பரந்துபட்ட வயல்வெளியெங்கும்
பறந்தோடித் திரிந்த காலங்கள்
கண்ணுக்குள் நிழலாடுகிறதே

கல்விதானே நம் செல்வம் -நாம்
கற்றதும் காதலித்ததும் -நாம்
கண்ட கனவுகளும் கடைசிவரை
புதைத்ததும் அதனுள் தானே

கற்பக தருவின் கனியமுதும்
கறந்து குடித்த பாலும்
கடைதெடுத்த மோரும்
பருகி பகிர்ந்துண்டு பசியாறி
கட்டிளம் காளைகள் போல்
ஊரெங்கும் துள்ளித்திரிந்தோமே!

துள்ளித் திரிந்த கன்றுகுட்டியும்
துரத்தி வந்த பசுவும்
கடிக்க வந்த எறுபும்
கதை சொன்ன பல்லியும்
காக்கா குருவியும் கத்தும் தவளையும்
காலை சுற்றிவந்த நாயும்
நம் இனிய உறவுகள்தானே!

ஊரெங்கும் நமது உறவுகள்
உயிர் பிரியா நண்பர்கள்
யாரு நமக்கு பகைவர்கள்?

கண்ணின் இமை காத்ததுபோல்
எம்மன்னை கட்டிக்காத்து வளர்த்தாளே
காலங்கள் எமை பிரித்ததேனோ?
காலன் வந்து ஒவ்வொன்றாய்
எமை கவர்ந்து சென்றதும் ஏனோ ?

அண்ணா என்ற சொந்தம் நீ மட்டும்தான்
உன் பிரிவு…
கண்ணீர் துளிகளில் நனைந்து போகிறது

அன்பு தம்பி
கி.மோகன்

(பாஸ்கரன் -சுவிஸ்
தொலை பேசி- 004121 647 33 16)

frames-design1r